மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம்
மயிலாடுதுறை மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம் மாவட்ட வருவாய் அதிகாரி முருகதாஸ் தலைமையில் நடந்தது.
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் முருகதாஸ் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் வேளாண் இணைஇயக்குனர்,பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் உள்ளிட்ட அதிகாரிகள் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
நடப்பாண்டு கோடை மழையால் உளுந்து, பயிறு முற்றிலுமாக மழையால் பாதிக்கப்பட்டுள்ளதற்கு நிவாரணம் வழங்க வேண்டும், உளுந்து, பயிறுக்கான பயிர்காப்பீட்டுத்தொகை வழங்க வேண்டும், தனியார் உரக்கடைகளுக்கு சென்றால் டி.ஏ.பி, யூரியா, பொட்டாஷ் போன்ற உரங்கள் வாங்க செல்லும் விவசாயிகளிடம், தேவையில்லாத கரைசல் போன்ற வேறு மருந்துகளை வாங்கச்சொல்லி கட்டாயப்படுத்துவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், மயிலாடுதுறை மாவட்டத்தில் தூர்வாரும் பணிகள் குறித்த விபரங்களை வெளிப்படைத்தன்மையாக அறிவிக்க வேண்டும். டெல்டா மாவட்டங்களில் தொடர்ந்து மணல் எடுக்கப்படுவதால் நிலத்தடி நீர் மட்டம் பாதித்து மக்கள் குடிநீருக்கே சிரமப்படும் நிலை உருவாகும் அதனால் கொள்ளிடம் ஆற்றில் மணல்குவாரி அமைப்பதை அரசு கைவிட வேண்டும்.
இதேபோல் பல விவசாயிகள் கோடை சாகுபடி செய்யப்பட்ட நெல்லை விற்பனை செய்வதற்கு கொள்முதல் நிலையங்கள் திறக்க வேண்டும் அல்லது நடமாடும் கொள்முதல் நிலையங்கள் மூலம் நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும், குறுவை சாகுபடிக்கு தடையில்லா மும்முனை மின்சாரம் கிடைப்பதை உறுதி படுத்த வேண்டும், பயிர்காப்பீட்டு இழப்பீட்டுத்தொகை விடுபடாமல் அனைவருக்கும் கிடைக்க செய்ய வேண்டுமென்று கோரிக்கை விடுத்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu