மழை நீரில் மூழ்கிய பயிர்களுக்கு நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை

மழை நீரில் மூழ்கிய பயிர்களுக்கு நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை
X

மயிலாடுதுறை அருகே மழையால் கதிருடன் சாய்ந்த பயிர்களை விவசாயிகள் சோகமுடன் எடுத்து பார்க்கிறார்கள்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் மழை நீரில் மூழ்கிய பயிர்களுக்கு நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த 4 நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் மயிலாடுதுறை மாவட்டத்தில் அறுவடைக்கு தயாரான சம்பா பயிர்கள் பல்வேறு இடங்களில் சாய்ந்து இந்த மழையால் நீரில் மூழ்கி உள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை தாலுகா வில்லியநல்லூர், ஆனந்ததாண்டவபுரம், சேத்தூர், பட்டவர்த்தி உள்ளிட்ட 5க்கும் மேற்பட்ட ஊராட்சிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் சம்பா பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளது.

இப்பகுதிகளில் அறுவடைக்கு தயாராக உள்ள நிலையில் மழையால் பயிர்கள் சாய்ந்துள்ளது. மேலும் இந்த மழை தொடர்ந்தால் நீரில் மூழ்கிய பயிர்கள் அழுக தொடங்கிவிடும் என்று விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். எனவே பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு கடந்த முறை போல இடுபொருட்கள் வழங்காமல் நிவாரணம் வழங்க வேண்டும் என்பது விவசாயிகளின் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story
ai tools for education