பழைய கூடலூரில் திமுக மூத்த முன்னோடி உருவச்சிலை சிலை திறப்பு

பழைய கூடலூரில் திமுக மூத்த முன்னோடி உருவச்சிலை சிலை திறப்பு
X

பழையகூடலுரில் நடந்த சிலை திறப்பு விழாவில் பங்கேற்ற பூம்புகார் எம்எல்ஏ நிவேதா எம் முருகன், அரசு தலைமை கொறடா கோவி செழியன், மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் எஸ் ராஜ்குமார் உள்ளிட்டோர்

திமுக மூத்த முன்னோடி கலியபெருமாள் உருவச்சிலையை மயிலாடுதுறை எம்பி. ராமலிங்கம் திறந்து வைத்தார்

மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் ஒன்றியம், பழையகூடலூரில் திமுக மூத்த நிர்வாகியின் உருவச்சிலை திறப்பு விழா நடைபெற்றது.

மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் ஒன்றியம், பழைய கூடலூர் ஊராட்சியில், மறைந்த திமுக மூத்த முன்னோடி கலியபெருமாள் உருச்சிலை திறப்பு விழா, பூம்புகார் சட்டமன்ற உறுப்பினரும் நாகை வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளருமான நிவேதா எம் முருகன் தலைமையில் நடைபெற்றது. இதில், சிறப்பு அழைப்பாளராக மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினர் ராமலிங்கம் கலந்து கொண்டு, கலியபெருமாள் திருவுருவ சிலையை திறந்து வைத்தார். விழாவில், தமிழ்நாடு அரசு தலைமை கொறடா கோவி. செழியன், மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் எஸ் ராஜ்குமார், குத்தாலம் ஒன்றிய குழு தலைவர் மகேந்திரன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் சத்தியசீலன், ஜெகவீரபாண்டியன், பால.அருட்செல்வன் மற்றும் முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் மனோகரன், செம்பை ஒன்றிய செயலாளர் அப்துல் மாலிக், மயிலாடுதுறை மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!