கண்டியன் குளத்தில் பக்தர்கள் காவடி, பால்குடம் எடுத்து சிறப்பு வழிபாடு

கண்டியன் குளத்தில்  பக்தர்கள் காவடி, பால்குடம் எடுத்து சிறப்பு வழிபாடு
X

அலகு காவடி மற்றும் பால்குடம் எடுத்தும் செல்லும் பக்தர்கள்.

கண்டியன் குளத்தில் ஆடி வெள்ளியை முன்னிட்டு பக்தர்கள் காவடி, பால்குடம் எடுத்து சிறப்பு அபிஷேக ஆராதனை செய்தனர்.

மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோவிலில் புகழ்வாய்ந்த கண்டியன் குளம் அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் ஆலயம் உள்ளது. வேண்டுதலை நிறைவேற்றி தரும் மாரியம்மனுக்கு சமையல் கலைஞர்கள் நேத்திக்கடன் செய்து வழிபாடு நடத்தினர்.

செம்பனார்கோவில், திருச்சம்பள்ளி, கடிச்சம்பாடி பகுதியைச் சேர்ந்த சமையல் கலைஞர்கள் சார்பாக நடைபெற்ற விழாவில் ஏராளமான பக்தர்கள் மேலமுக்கூட்டு விநாயகர் ஆலயத்தில் இருந்து பால்குடம் அலகுகாவடி எடுத்து மேளதாளத்துடன் ஆலயம் வந்தடைந்தனர்.

அதில், ஒரு பக்தர் 16 அடி அழகு குத்தி நேர்த்திக்கடன் செலுத்தினார். ஆலயத்தில் மாரியம்மனுக்கு பால் அபிஷேகம் மற்றும் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு மகா தீபாராதனை செய்யப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபாடு நடத்தினர்.

Tags

Next Story
ai in future agriculture