பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்

பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்
X

சீர்காழியில் பெட்ரோல் டீசல் விலை உயர்வைக் கண்டித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம்.

சீர்காழியில் பெட்ரோல் டீசல், விலை உயர்வைக் கண்டித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தலைமை தபால் நிலையம் எதிரே தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மக்களின் வாழ்வாதாரத்தை முடக்கும் அளவிற்கு மத்திய அரசு பெட்ரோல், டீசல், கேஸ் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலையை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதாக முழக்கங்களை எழுப்பினர். இதனால், ஏழை மக்கள் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக உள்ளதால் மத்திய அரசு உடனடியாக விலைவாசியை குறைக்க வேண்டும், இல்லையென்றால் பிரதமர் பதவி விலக வேண்டும் என்ற முழக்கங்களை எழுப்பி தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!