தமிழகத்திலிருந்து ஆளுநர்வெளியேற வலியுறுத்தி மயிலாடுதுறையில் ஆர்ப்பாட்டம்

தமிழகத்திலிருந்து  ஆளுநர்வெளியேற வலியுறுத்தி மயிலாடுதுறையில் ஆர்ப்பாட்டம்
X

ஆளுநரை தமிழகத்தை விட்டு வெளியேற வலியுறுத்தி  திராவிடர் விடுதலை கழகம் சார்பில் மயிலாடுதுறையில் நடந்த ஆர்ப்பாட்டம்

ஆளுநரை தமிழகத்தை விட்டு வெளியேற வலியுறுத்தி மயிலாடுதுறையில் திராவிடர் விடுதலை கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம்

நீட் விலக்கு கோரி அனைத்து கட்சிகள் இயற்றிய தீர்மானத்தை ஏற்க மறுத்து திருப்பி அனுப்பிய ஆளுநரை தமிழகத்தை விட்டு வெளியேற வலியுறுத்தி மயிலாடுதுறையில் திராவிடர் விடுதலை கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம்.

நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க கோரி தமிழ்நாட்டின் அனைத்துக் கட்சிகளும் சேர்ந்து நிறைவேற்றிய தீர்மானத்தை ஏற்க மறுத்து திருப்பி அனுப்பிய தமிழர் விரோத ஆளுநரை தமிழ் நாட்டை விட்டு வெளியேற வலியுறுத்தி மயிலாடுதுறையில் திராவிடர் விடுதலை கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மாவட்ட செயலாளர் மகேஷ் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மண்டல செயலாளர் வேலுகுபேந்திரன் உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர். இதில் விசிக, எஸ்டிபிஐ, மனிதநேய மக்கள் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) உள்ளிட்ட பல்வேறு கட்சியினரும், பாப்புலர் ஃப்ரண்ட் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினரும் கலந்துகொண்டு தமிழக ஆளுநரை வெளியேற வலியுறுத்தி கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!