சீர்காழி: சத்துணவு & அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

சீர்காழி: சத்துணவு & அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
X

சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கம் சார்பில் , சீர்காழியில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியில், சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியில், தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கம் சார்பில், கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சீர்காழி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்டத் தலைவர் சந்திரா தலைமை வகித்தார்.

இதில், ஓய்வூதிய சட்ட விதிகளின்படி குறைந்தபட்ச ஓய்வூதியம் மாதம் ரூ 7850 அகவிலைப்படி, மருத்துவப்படியுடன் வழங்க வேண்டும், பொது சேமநல நிதியில் பிடித்தம் செய்யப்பட்ட தொகையை ஓய்வூதியர்களுக்கு உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் தமிழக முதல்வரின் தேர்தல் அறிக்கையில், சத்துணவு அங்கன்வாடி ஊழியர்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நினைவூட்ட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, முழக்கங்கள் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் 50க்கும் மேற்பட்ட ஓய்வூதிய சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!