சீர்காழியில் அனைத்து தொழிற்சங்கத்தினர் சார்பாக மத்திய அரசைகண்டித்து ஆர்ப்பாட்டம்

சீர்காழியில் அனைத்து தொழிற்சங்கத்தினர் சார்பாக மத்திய அரசைகண்டித்து ஆர்ப்பாட்டம்
X
ஆர்ப்பாட்டத்தில பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் அரசு துறைகளை தனியார்மயப்படுத்துவதை நிறுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டது

சீர்காழியில் அனைத்து தொழிலாளர் சங்க சார்பாக 3 வேளாண் சட்டங்கள் திரும்பப் பெற வலியுறுத்தி மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியில் அனைத்து தொழிற்சங்க சார்பாக மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஏஐடியுசி மாவட்ட செயலாளர் ராமன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில். 3 வேளாண் சட்டங்கள் திரும்பப் பெற வலியுறுத்தியும், மின்சார திருத்த சட்டம், பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் அரசு துறைகளை தனியார்மயப்படுத்துவதை நிறுத்த வேண்டியும், பெட்ரோல் டீசல் சமையல் எரிவாயு விலை உயர்வை உடனே திரும்பப் பெற வலியுறுத்தியும், கொரோனா தடுப்பூசி கட்டணமின்றி செலுத்துவதை உறுதி செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, மத்திய அரசு கண்டித்து முழக்கமிட்டனர்.

Tags

  • 1
  • 2

  • Next Story
    the future of ai in healthcare