தில்லி விவசாயிகள் போராட்டம்: மயிலாடுதுறையிலிருந்து விவசாயிகள் ரயிலில் பயணம்

தில்லி விவசாயிகள் போராட்டம்:  மயிலாடுதுறையிலிருந்து விவசாயிகள் ரயிலில் பயணம்
X
கோரிக்கையை வலியுறுத்தி வருகின்ற 5 -ஆம் தேதி பாராளுமன்றத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப் போவதாக விவசாயிகள் அறிவித்துள்ளனர்

தில்லியில் நடைபெற உள்ள பாராளுமன்ற முற்றுகை போராட்டத்தில் பங்கேற்பதற்காக டெல்டா விவசாயிகள் மயிலாடுதுறையில் இருந்து ரயில் மூலம் பயணம் மேற்கொண்டனர்.

விவசாயிகளுக்கு எதிரான மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெற மத்திய அரசை வலியுறுத்தி டெல்லியில் விவசாயிகள் கடந்த 8 மாதங்களுக்கும் மேலாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், கோரிக்கையை வலியுறுத்தி வருகின்ற 5 -ஆம் தேதி பாராளுமன்றத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப் போவதாக விவசாயிகள் அறிவித்துள்ளனர்.

விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து இப்போராட்டத்தில் பங்கேற்பதற்கக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் டெல்டா மாவட்ட விவசாயிகள், தமிழ்நாடு விவசாய சங்க மாநில தலைவர் சுப்பிரமணியன் தலைமையில், மயிலாடுதுறை ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டுச் சென்றனர். அனைவரையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் விவசாய சங்கத்தினர் திரண்டு வந்து வழியனுப்பி வைத்தனர்.


Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!