மயிலாடுதுறையில் டிஏபி அடி உரம் தட்டுப்பாடு விவசாயிகள் கவலை

மயிலாடுதுறையில் டிஏபி அடி உரம் தட்டுப்பாடு விவசாயிகள் கவலை
X
மயிலாடுதுறை மாவட்டத்தில் முற்பட்ட குறுவை சாகுபடி பணி தொங்கப்பட உள்ளது. தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகளில் டிஏபி அடி உரம் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் முற்பட்டக்குறுவை நடவு பணி நடைபெற்றுவருகிறது. மாவட்டத்தில் 50ஆயிரம் ஏக்கரில் நிலத்தடிநீரை கொண்டு முற்பட்ட குறுவை சாகுபடி செய்வது வழக்கம். மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் குறுவை பணியில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் விவசாயிகள் குறுவைக்கு அடியுரமாக டிஏபி இடுவது வழக்கம். ஏக்கருக்கு ஒரு மூட்டை வீதம் விவசாயிகள் உபயோக படுத்துவார்கள். தற்பொழுது மத்திய அரசு டிஏபி விலையை ரூ.700வரை உயர்த்தியுள்ளது.

ஏற்கனவே அரசு தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் மூட்டை ரூ.1100 முதல் ரூ.1200 வரை விற்பனையாகி வருகிறது. வெளி மார்கெட்டில் ரூ.1800 முதல் ரூ.1900 வரை விற்பனை செய்யப்படுவதால், விவசாயிகள் டிஏபியை போட்டிபோட்டு கொண்டு கேட்கும் பொழுது 10 மூட்டை கேட்டால் 3 மூட்டை என்று வழங்குகின்றனர். மேலும் கேட்டால் உரம் இருப்பு இல்லை என்று கைவிரிக்கின்றனர்.

மூவலூர், ஆனைமேலகரம், சித்தர்காடு ஊராட்சிகளுக்கு மல்லியம் பகுதியில் உள்ள விவசாயிகளுக்கு மூவலூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிமூலம் உரங்கள் வழங்கப்பட்டு வருகிறது.

விவசாயிகள் டிஏபி உரம் கேட்டதற்கு தற்பொழுது இருப்பு இல்லை என்று தெரிவித்துள்ளனர். மாவட்டம் முழுவதும் 64 கூட்டுறவு வங்கி கிளைகள் மூலம் உரங்களை வழங்கி வரும் மயிலாடுதுறை மாவட்டத் துணைப்பதிவாளர் அலுவலகத்தில் இது குறித்து கேட்டதற்கு, முற்பட்ட குறுவைக்கு ஓரளவிற்கு தான் அடியுரம் விற்பனையாகும் என்பதால் இருப்பு குறைவாக இருந்திருக்கலாம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினர்.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!