வீடுவீடாக போய் நன்றி தெரிவித்த தரங்கம்பாடி பேரூராட்சி கவுன்சிலர்கள்

வீடுவீடாக போய் நன்றி தெரிவித்த தரங்கம்பாடி பேரூராட்சி கவுன்சிலர்கள்
X

தரங்கம்பாடி பேரூராட்சியில் 15 வார்டு உறுப்பினர்கள்,  வீடு வீடாக சென்று இனிப்புகள் வழங்கி நன்றி கூறினர்.

தரங்கம்பாடி பேரூராட்சியில் வெற்றி பெற்ற, 15 வார்டு உறுப்பினர்கள், வீடு வீடாக சென்று இனிப்புகள் வழங்கி, வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தனர்.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி பேரூராட்சியில், 15 வார்டுகளில் கடந்த 19ம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. இதில், தேர்தலில் போட்டியிட்ட 15 வார்டுகளில், திமுக வெற்றி பெற்றது. அதைத்தொடர்ந்து நாகை வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினருமான நிவேதா எம் .முருகன் அறிவுறுத்தலின் பேரில் 15 வார்டு உறுப்பினர்கள், திமுக வார்டு பொறுப்பாளர்களுடன் வீடு வீடாக சென்று வாக்கு செலுத்தியவர்களுக்கு இனிப்புகள் வழங்கி நன்றி தெரிவித்தனர்.

நிகழ்ச்சிகளில் ஒன்றிய திமுக செயலாளர்கள் எம்.அப்துல்மாலிக், பி.எம்.அன்பழகன், நகர செயலாளர் வெற்றிவேல், நகர அவைத்தலைவர் கந்தசாமி, திமுக பிரமுகர்கள் எம்.ஆர்.கே.முத்துக்குமார், ஒன்றியக்குழு உறுப்பினர் ஈச்சங்குடி இளங்கோவன் ,ஊராட்சி மன்ற தலைவர்கள் ராஜா பைலட் மற்றும் கழக மூத்த முன்னோடிகள் கூட்டணி கட்சி நிர்வாகிகள் நன்றி தெரிவித்தனர்.

Tags

Next Story
ai marketing future