மயிலாடுதுறையில் கொரோனா தடுப்பூசி முகாம்: மாவட்ட ஆட்சியர் தொடக்கி வைத்தார்
மயிலாடுதுறையில் கொரோனா தடுப்பு விழிப்புணர்வு வாரத்தின் மூன்றாம் நாளான 500 வியாபாரிகளுக்கு கொரோனா தடுப்பூசி போடும் முகாமை மாவட்ட ஆட்சியர் லலிதா தொடக்கி வைத்தார்.
கொரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த அனைத்து மாவட்டங்களிலும் ஒரு வாரத்திற்கு விழிப்புணர்வு முகாம் நடத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அந்த வகையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் ஆகஸ்ட் 1-ஆம் தேதி முதல் வருகின்ற 7 -ஆம் தேதி வரை கொரோனா நோய் தடுப்பு வழிமுறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் துண்டு பிரசுரங்கள் வழங்குதல், கையேடுகள் வழங்குதல், பொதுமக்கள் கூடும் இடங்களில் விளம்பர பணிகள் மேற்கொள்ளுதல், வியாபாரிகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம், மாணவ,மாணவிகளுக்கான கொரோனா விழிப்புணர்வு குறித்த சுவரொட்டிகள் தயார் செய்யும் போட்டி, ஓவிய போட்டி , சிறந்த வாசகங்கள், மீம்ஸ் தயார் செய்தல் ஆகிய போட்டிகள் நடத்த திட்டமிடப்பட்டது.
அதன்படி, 3-ஆம் நாளான இன்று வியாபாரிகளுக்கு கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் வியாபாரிகள் 500 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. மயிலாடுதுறை வர்த்தகர் சங்கம் சார்பில் நடைபெற்ற முகாமை மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் லலிதா தொடக்கி வைத்து, கொரோனா ஒழிப்புப் பணியில் சிறப்பாக பணியாற்றிய சுகாதார ஊழியர்கள் 20 பேருக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu