சீர்காழியில் நடமாடும் கொரோனா தடுப்பூசி முகாம்; வியாபாரிகள் மகிழ்ச்சி
நடமாடும் வாகனம் மூலம் கடைகளுக்கே சென்று வியாபாரிகளுக்கு தடுப்பூசி செலுத்தும் சுகாதாரத்துறையினர்.
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியில் நடமாடும் கொரோனா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது. இந்த முகாமின் மூலம் கடை, கடையாக தேடிச் சென்று வியாபாரிகள், ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.
வியாபாரிகள், வர்த்தகநிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் அவசியம் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளவேண்டும் என மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா அறிவுறுத்தினார். அதன்படி சீர்காழியில் நகராட்சி மற்றும் திருவெண்காடு அரசு ஆரம்ப சுகாதாநிலையம் ஆகியன சார்பில் அனைத்து கடை வியாபாரிகள், ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்திட நடமாடும் முகாம் நடைபெற்றது.
முகாமை நகராட்சி ஆணையர் பெ.தமிழ்செல்வி தொடங்கிவைத்தார். இதில் அரசு ஆரம்ப சுகாதாரநிலையம் வட்டார மருத்துவ அலுவலர் ராஜ்மோகன் மற்றும் மருத்துவக் குழுவினர்கள் கடை, கடையாக சென்று வியாபாரிகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தினர்.
சீர்காழி பிடாரி வடக்கு வீதியில் தொடங்கிய இந்த முகாம், நாகேஸ்வரமுடையார் கோயில் வரை சென்று சுமார் 75க்கும் மேற்பட்ட வியாபாரிகளுக்கு தடுப்பூசி செலுத்தினர். இதில் சாலையில் சென்ற பொதுமக்களும் ஆதார் கார்டுகளை கொடுத்து தடுப்பூசி செலுத்திக்கொண்டனர்.
தங்கள் கடைகளுக்கே வந்து கொரோனா தடுப்பூசியை செலுத்துவதால், எப்போதும் பரபரப்பாக உள்ள வியாபாரிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu