மயிலாடுதுறை மாவட்டத்தில் 499 இடங்களில் மெகா கொரோனா தடுப்பூசி முகாம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் 499 இடங்களில் மெகா கொரோனா தடுப்பூசி முகாம்
X

குத்தாலம் அருகே வானாதிராஜபுரத்தில் மெகா தடுப்பூசி முகாமை மாவட்ட ஆட்சியர் லலிதா தொடங்கி வைத்தார்.

மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் அருகே வானாதிராஜபுரத்தில் மெகா தடுப்பூசி முகாமை ஆட்சியர் லலிதா தொடங்கி வைத்தார்.

மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் அருகே வானாதிராஜபுரத்தில் தமிழக அரசின் மெகா கொரோனா தடுப்பூசி முகாமை மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் லலிதா தொடங்கி வைத்தார்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்று நடைபெற உள்ள மெகா தடுப்பூசி முகாமில் 50 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்காக மாவட்டம் முழுவதும் ஐந்து ஒன்றியங்களில் 406 ஊராட்சிகள், இரண்டு நகராட்சிகளில் 22 இடங்கள், 4 பேரூராட்சிகளில் 24 இடங்கள், 31 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், 6 மருத்துவமனைகள் 10 நடமாடும் தடுப்பூசி குழுக்கள் என மொத்தம் 499 இடங்களில் முகாம் அமைக்கப்பட்டு தடுப்பூசி செலுத்தப்படுகிறது.

இப்பணியில் 364 செவிலியர்கள், 114 மருத்துவர்கள் மற்றும் வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!