மயிலாடுதுறை: தொடர் மழையால் 20 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர் நீரில் மூழ்கியது

மயிலாடுதுறை: தொடர் மழையால் 20 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர் நீரில் மூழ்கியது
X

மயிலாடுதுறை அருகே நீரில் மூழ்கிய நெற்பயிரை கையில் எடுத்து காட்டும் விவசாயி.

மயிலாடுதுறை மாவட்டத்தில் தொடர் மழையால் 20 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கியது.

மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த 10 நாட்களாக தொடர்ந்து விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இன்று விடியற்காலை ழ முதல் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. இன்னும் மூன்று நாட்களுக்கு மழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது விவசாயிகளுக்கு கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

மயிலாடுதுறை மாவட்டத்தில் மறையூர், சிறுகோவங்குடி, முட்டம், ஊர்குடி, சேத்ததூர் உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் சம்பா பயிர்கள் நீரில் மூழ்கி உள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். தொடர்ந்து மழை பெய்து வருவதால் பயிர்கள் அழுகி வருவதாக வேதனை தெரிவித்துள்ளனா். எனவே பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கர் ஒன்றுக்கு 25ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!