தரங்கம்பாடியில் செயற்கை பவளப்பாறை அமைக்கும் பணி: பூம்புகார் எம்எல்ஏ தொடக்கம்

தரங்கம்பாடியிலிருந்து சுமார் 7 கிலோ மீட்டர் தொலைவில் கடல் உயிரினங்களைப் பாதுகாக்கும் செயற்கை பவளப்பாறை அமைக்கப்படுகிறது


தரங்கம்பாடியில் கடல் உயிரினங்கள் பாதுகாக்கும் செயற்கை பவளப்பாறை அமைக்கும் பணிகளை பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா முருகன் கொடியசைத்து தொடக்கி வைத்தார்.

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுகா, கடலோர மீனவ கிராமங்களான தரங்கம்பாடி, புதுப்பேட்டை, சின்னங்குடி, சின்னமேடு, பெருமாள்பேட்டை, மாணிக்கபங்கு உள்ளிட்ட 8 மீனவ கிராமங்களிலிருந்து சுமார் 7 கிலோமீட்டர் தூரத்தில் கடல் உயிரினங்கள் பாதுகாக்கும் வகையில் செயற்கை பவளப்பாறை அமைக்கும் பணிகளை, பூம்புகார் சட்டமன்ற உறுப்பினரும் நாகை வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளருமான நிவேதா எம்.முருகன், கடலில் படகில் சென்று கொடியசைத்து மலர்தூவி, செயற்கை பவளப்பாறைகளை நடுக்கடலில் இறக்கும் பணியை தொடக்கி வைத்தார்.

நிகழ்ச்சியில், ஒன்றிய செயலாளர் அப்துல் மாலிக், மீன்வளத்துறை அதிகாரிகள், தரங்கம்பாடி மீனவ கிராம பஞ்சாயத்தார்கள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சித்திக், தரங்கை பேரூராட்சி திமுக செயலாளர் வெற்றிவேல், உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!