மயிலாடுதுறையில் உலக தாய்ப்பால் வார விழா; விழிப்புணர்வு பிரசார வாகனம் துவக்கி வைப்பு
தாய்ப்பால் விழிப்புணர்வு பிரச்சார வாகன பேரணியை மாவட்ட ஆட்சியர் லலிதா குத்துவிளக்கு ஏற்றி கொடியசைத்து துவக்கி வைத்தார்.
உலகத் தாய்ப்பால் வார விழா ஆகஸ்ட் முதல் வாரம் கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் உலக தாய்ப்பால் வாரவிழாவை முன்னிட்டு மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தாய்ப்பால் விழிப்புணர்வு பிரச்சார வாகன பேரணியை மாவட்ட ஆட்சியர் லலிதா குத்துவிளக்கு ஏற்றி கொடியசைத்து துவக்கி வைத்தார்.
பிறந்த குழந்தைகளுக்கு ஆறு மாதத்திற்கு தாய்ப்பால் கொடுக்க வேண்டும். சீம்பால் குழந்தைக்கு முதல் தடுப்பு மருந்து, ஆறு மாதத்திற்கு பிறகு குழந்தைகளுக்கு தாய்ப்பாலுடன் ஊட்டச்சத்துள்ள உணவுகளை வழங்கவேண்டும்.
பாலூட்டும் தாய்மார்களுக்கு தாய்ப்பால் கொடுப்பதன் அவசியத்தை தெரிந்து கொள்ளும் வகையில் தாய்ப்பால் கொடுப்பதன் அவசியத்தை உணர்த்துவோம் என்று மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் குழந்தைகள் வளர்ச்சி திட்ட அங்கன்வாடி பணியாளர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
தொடர்ந்து கர்ப்பிணி பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு விழிப்புணர்வு கையேடுகளை மயிலாடுதுறை வட்டாரத்தில் மக்கள் கூடும் இடங்களுக்கு சென்றனர். அங்கு அங்கன்வாடி பணியாளர்கள் விழிப்புணர்வு கையேடுகளை வழங்கினர். இதில் சுகாதாரத்துறை அதிகாரிகள் குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu