3அடி உயரமுள்ள தென்னை மரத்தில் குலைகுலையாய் காய்க்கும் தேங்காய்

3அடி உயரமுள்ள தென்னை மரத்தில் குலைகுலையாய் காய்க்கும் தேங்காய்
X

3 அடி உயர தென்னை மரத்தில் காய்த்து தொங்கும் தேங்காய் 

மயிலாடுதுறை அருகே 3அடி உயரமுள்ள தென்னை மரத்தில் குலைகுலையாய் காய்க்கும் தேங்காய் விவசாயி மகிழ்ச்சி:

தென்னை மரங்களில் குட்டை, நெட்டை மற்றும் இளநீர் ரகங்கள் என்று பல வகை உண்டு. தென்னை எல்லா வகை மண்ணிலும் வளரக் கூடியது. மயிலாடுதுறை மாவட்டம் மறையூர் கிராமத்தில் வசிப்பவர் விவசாயி சிவக்குமார். இவர் தனது வீட்டின் வாசலில் 12 வருடங்களுக்கு முன்பு வைத்த தென்னைமரம் 22 அடி உயரம் வளர்ந்து 5 வருடங்களாக நன்றாக காய்த்து குலுங்கியது.

இந்நிலையில் கடந்த 2018ம் ஆண்டு இந்த மரத்தில் காய்த்த நெத்துதேங்காயை எடுத்து வீட்டின் கொல்லையில் பதியம் செய்து உள்ளார். வாசலில் இருந்த தாய் மரம் நன்றாக காய்த்து வந்த நிலையில் கடந்த 2019 ஆம் ஆண்டு பெய்த கனமழையின் போது இடி தாக்கியதில் கருகி மரம் பட்டுப் போய்விட்டது. இதனால் குடும்பத்தினர் வருத்தத்தில் இருந்தனர்.

இந்நிலையில் தான் பதியம் போட்டு வைத்த மரம் 2 அடி உயரத்தில் வளர்ந்த நிலையில் தேங்காய் காய்க்க தொடங்கியது கண்டு மகிழ்ச்சியடைந்தார். சிறிய மரத்தில் தேங்காய் காய்க்கும் செய்தியறிந்து கிராமமக்கள் ஆச்சரியத்துடனும், வியப்புடனும் அந்த மரத்தை சென்று பார்த்து வருகின்றனர்.

தற்பொது 3அடி உயரமுள்ள இந்த தென்னை மரத்தில் குலைகுலையாய் தேங்காய் காய்த்து தொங்குகிறது. இந்த மரத்தில் உள்ள தேங்காய், இளநீரை பறித்து கோயில் அபிஷேகத்திற்கு கொடுப்பதாகவும், இதுவரை 50க்கம் மேற்பட்ட தேங்காய் பறித்துள்ளதாகவும் மகிழ்ச்சியுடன் கூறினார் சிவக்குமார். குலைகுலையாய் காய்க்கும் தென்னை மரத்தை பார்க்க வரும் கிராமமக்களிடம் டேப்பை வைத்து அளந்து காண்பித்து வருகிறார். சிறிய மரத்தில் காய்க்கும் தேங்காய் பெரிய மரத்தில் காய்க்கும் தேங்காய் போன்று உள்ளதால் இளநீர் தண்ணி அதிகமாக உள்ளதால் உற்சாகத்துடன் மரத்தை பாதுகாப்பாக பராமரித்து வருகிறார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!