குடிசை வீட்டை பங்கு பிரிக்கும் தகராறில் அண்ணனை அடித்துக் கொன்ற தம்பி கைது
கொலை செய்யப்பட்ட சின்னராசு
தரங்கம்பாடி அருகே குடிசை வீட்டை பங்கு பிரிக்கும் தகராறில் அண்ணனை அடித்துக் கொன்ற தம்பியை போலீசார் கைது செய்துள்ளனர்.
மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்கா, காலமநல்லூர் அருகே உள்ள சங்கேந்தி கிராமத்தை சேர்ந்தவ ரமேஷ் மகன் சின்னராசு(24) டிரைவர். அவரது தம்பி விவேக்(20) கொத்தனார். இவர்கள் இருவரும் தங்களுக்கு சொந்தமான சிறிய குடிசை வீட்டில் வசித்து வருகின்றனர்.
அந்த குடிசை வீட்டை பங்கு பிரிப்பதில் சகோதரர்களுக்கு இடையே அவ்வப்போது தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. நேற்று இரவும் இருவருக்குமிடையே குடிசையை பங்கு பிரிப்பதில் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், ஆத்திரமடைந்த விவேக் அருகில் கிடந்த மரக்கட்டையால் தாக்கியதில், சின்னராசு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்த பொறையாறு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, சின்னராசு உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததுடன், கொலை வழக்குப் பதிந்து, விவேக்கை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu