/* */

பிக்-பாஸ் நிகழ்ச்சியை தடை செய்யக்கோரி பாஜகவினர் புகார்

கலாசாரத்துக்கு எதிரான பிக்-பாஸ் நிகழ்ச்சிக்கு தடை விதிக்க கோரி மயிலாடுதுறை போலீசில் பாஜக சார்பில் புகார் மனு

HIGHLIGHTS

பிக்-பாஸ் நிகழ்ச்சியை தடை செய்யக்கோரி பாஜகவினர் புகார்
X

மயிலாடுதுறை காவல் நிலையத்தில் புகார் அளித்த நகர பாரதிய ஜனதா கட்சி தலைவர் மோடி கண்ணன்  

பிக்-பாஸ் நிகழ்ச்சி கலாசார சீரழிவை ஏற்படுத்துவதாகவும், அதைத் தடுத்து நிறுத்த வேண்டுமென பாஜக சார்பில் காவல் நிலையத்தில் மனு அளிக்கப்பட்டது

மயிலாடுதுறை நகர பாரதிய ஜனதா கட்சி தலைவர் மோடி கண்ணன் மயிலாடுதுறை காவல் நிலையத்தில் ஆய்வாளர் செல்வத்திடம் புகார் மனு அளித்தார். அந்தமனுவில் குறிப்பிட்டுள்ளதாவது: தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் பிக் -பாஸ் என்ற நிகழ்ச்சி இந்து கலாச்சாரத்துக்கு எதிராகவும், நிகழ்ச்சி பங்கேற்பாளர்களை அதிக மன உளைச்சலுக்கு உள்ளாக்குவதாகவும், பங்கேற்கும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாததாகவும் உள்ளது.

கொரோனா மூன்றாவது அலை தீவிரமாக இருக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் , கொரோனா காரணமாக கோயில்களை திறக்கவும், விநாயகர் சதுர்த்தி விழாவை நடத்தவும் அனுமதி மறுக்கப்பட்டுவரும் நிலையிலும், பிக் பாஸ் நிகழ்ச்சி நடத்துவது தேவையற்றது. இதில், நிகழ்ச்சி தயாரிப்புக்காக 500 -க்கும் மேற்பட்டோர் ஒன்று கூடுகின்றனர். எனவே, கொரோனா காலத்தில், கலாசார சீரழிவுக்கு வழி வகுக்கும் பிக் -பாஸ் நிகழ்ச்சியை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டு இருந்தது.

Updated On: 3 Sep 2021 5:00 PM GMT

Related News