பிரதமர் மோடியை விமர்சித்து ஆட்டோவில் பேனர்: காவல்துறையிடம் பாஜக புகார்

பிரதமர் மோடியை விமர்சித்து ஆட்டோவில் பேனர்: காவல்துறையிடம் பாஜக புகார்
X

மயிலாடுதுறையில் பிரதமர் மோடியை விமர்சித்து ஆட்டோவில் பொருத்தப்பட்ட பேனர்

பிரதமரை விமர்சித்து ஆட்டோவில் பேனர் பொருத்தப்பட்ட சம்பவம் மயிலாடுதுறையில் பரபரப்பை ஏற்படுத்தியது.

பிரதமர் நரேந்திர மோடியை விமர்சித்து ஆட்டோவில் பேனர் பொருத்தியிருந்த ஆட்டோ உரிமையாளர் மீது மயிலாடுதுறை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, காவல்துறையினர் ஆட்டோவில் இருந்த பேனரை அகற்றினர்.

பாரத பிரதமர் நரேந்திர மோடி நாட்டின் 75 ஆண்டு கால சொத்துக்களை விற்று சீரழிப்பதாகவும் , ராணுவம், நீதித்துறை, விண்வெளித்துறை மற்றும் பிரதமர், ஜனாதிபதி பதவிகளை தனியாருக்கு விற்றுவிடலாமா? என்றும், இது தேச துரோகம் என விமர்சித்து, மயிலாடுதுறையைச் சேர்ந்த ஆட்டோ உரிமையாளர் வடிவேலு என்பவர் தனது ஆட்டோவில் பேனர் பொருத்தியிருந்தார். அவர்மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, மயிலாடுதுறை பாஜக நகர தலைவர் மோடி.கண்ணன் தலைமையில் பாஜகவினர், மயிலாடுதுறை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இதையடுத்து, போலீஸார் உடனடியாக ஆட்டோ மற்றும் உரிமையாளரை பிடித்து காவல்நிலையத்துக்கு கொண்டு வந்து, ஆட்டோவில் பொருத்தப்பட்டிருந்த பேனரை போலீசார் அகற்றினர். தொடர்ந்து ஆட்டோ உரிமையாளர் தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்து கடிதம் எழுதிக் கொடுத்துவிட்டு சென்றார். பிரதமரை விமர்சித்து ஆட்டோவில் பேனர் பொருத்தப்பட்ட சம்பவம் மயிலாடுதுறையில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags

Next Story
ai marketing future