மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அதிகாரிகள் ஆய்வு
மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கணக்கு வழக்குகள் குறித்து அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்
மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் எஸ் ராஜ்குமார் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார். கூட்டத்தில் ஒன்றிய பொது நிதியில் பெருமளவில் முறைகேடு நடந்துள்ளதாகவும் குற்றம் சாட்டி உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர்.
ராதாநல்லூர், வேப்பங்குளம், பட்டவர்த்தி, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் குடிநீர் குழாய் பராமரிப்பு செய்யாமலும் கிராமத்தில் இல்லாத தெருவில் பணிகள் செய்ததாகவும், பணிகள் குறித்து உறுப்பினர்களின் விவாதம் நடைபெறாமல் பணம் எடுக்கப்பட்டதாக பில் கணக்கு காட்டப்பட்டு முறைகேடு நடைபெற்றதாக குற்றம்சாட்டி கேள்வி எழுப்பினர்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியருக்கு புகார் மனு அளிக்கப்பட்டதாக உறுப்பினர்கள் பேசினர். இந்நிலையில் தமிழ்நாடு மாநில கிராமப்புற வாழ்வாதார பணி திட்ட இயக்குநரக அதிகாரிகள்; மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கணக்கு வழக்குகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.
இந்த ஆய்வு குறித்து எந்த தகவலையும் அதிகாரிகள் கூற மறுத்துவிட்டனர். 4மணிநேரம் ஆய்வு நடைபெற்றது. தமிழ்நாடு மாநில கிராமப்புற வாழ்வாதாரப்பணி இயக்குநரக அதிகாரிகள் விசாரணை செய்து வருவது அதிகாரிகளை கலக்கமடைய செய்துள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu