மயிலாடுதுறை: பேப்பர் மாலை அணிந்து குதிரையில் வந்தார் சுயேச்சை வேட்பாளர்

மயிலாடுதுறையில் வேட்பு மனு தாக்கல் செய்வதற்காக குதிரையில் வந்தார் சுயேச்சை வேட்பாளர்.
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வேட்புமனுதாக்கல் வருகின்ற 4-ஆம் தேதியுடன் முடிவடைகிறது. மயிலாடுதுறை நகராட்சியில் அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. கட்சிகளிpன் வேட்பாளர்கள் வேட்பு மனுதாக்கல் செய்யாத நிலையில் சுயேட்சை மற்றும் பிற கட்சி வேட்பாளர்கள் மட்டும் வேட்பு மனுத் தாக்கல் செய்து வருகின்றனர்.
அந்த வகையில் மயிலாடுதுறை நகராட்சி 9-வது வார்டில் பேட்டியிட மனுதாக்கல் செய்ய வந்த சுயேட்சை வேட்பாளர் பிரகாஷ் என்பவர் தனது வார்டு குறைகளை பேப்பரில் எழுதி மாலையாக அணிந்து குதிரையில் வந்து நூதன முறையில் வேட்பு மனு தாக்கல் செய்தார். வேட்பு மனுத் தாக்கல் செய்ய குதிரையில் வந்ததை ஏராளமான பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu