தருமபுரம் ஆதீன பள்ளிகளில் பயின்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பு.

தருமபுரம் ஆதீன பள்ளிகளில்  பயின்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பு.
X

தருமபுரம் ஆதினம் 27வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகளை சந்தித்து அருளாசி பெற்ற முன்னாள் மாணவர்கள்

தருமபுரம் ஆதீன பள்ளிகளில் 1ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை பயின்ற முன்னாள் மாணவர்கள் தருமபுரம் ஆதினத்தை சந்தித்து அருளாசி பெற்றனர்

மயிலாடுதுறை தருமபுரம் ஆதீன தொடக்கப்பள்ளி மேல்நிலைப்பள்ளிகளில் 1ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை படித்த முன்னாள் மாணவர்கள் சந்தித்துகொண்ட நெகிழ்ச்சியான சம்பவம் நடைபெற்றது.

இப்பள்ளியில் 1980 முதல் 1989ம் ஆண்டு வரை படித்த இம்மாணவர்கள் பல்வேறு துறைகளில் பணியாற்றி குடும்பத்தினருடன் பல்வேறு மாவட்டங்களில் வசித்து வருகின்றனர். ஒருவரை ஒருவர் சமூக வலைதளம்மூலம் தொடர்புகொண்டு வந்த மாணவர்கள் 40க்கும் மேற்பட்டோர் இன்று தங்கள் பள்ளிக்கு வந்து ஒருவரை ஒருவர் சந்தித்துகொண்டு, பாசத்துடன் கலந்துரையாடி, பசுமை நிறைந்த நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.

பின்னர் ஆசிரியர்கள் நண்பர்களுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்து கொண்டனர். தங்களுக்கு பாடம் கற்பித்த ஆசிரியர்களை அழைத்து கவுரவித்த முன்னாள் மாணவர்கள், ஆசிரியர்களுடன் கலந்துரையாடினர். பள்ளிக்கு வந்த மாணவர்களை ஆசிரியர்கள் சந்தனம் இனிப்பு வழங்கி வரவேற்று வாழ்த்து தெரிவித்தனர்.

முன்னதாக தருமபுரம் ஆதினம் 27வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகளை தருமபுரம் ஆதினத்தில் சந்தித்து அருளாசி பெற்றனர். ஏழை எளிய மாணவர்கள் படித்து வரும் இப்பள்ளியில் பயிலும் மாணவர்களின்' வளர்ச்சிக்கு உதவி செய்ய உள்ளதாக முன்னாள் மாணவர்கள் தெரிவித்தனர்.

Tags

Next Story