விவசாயிகளுக்கு உழவு இயந்திரம் வழங்கும் நிகழ்ச்சி

விவசாயிகளுக்கு உழவு இயந்திரம் வழங்கும் நிகழ்ச்சி
X

விவசாயிகளுக்கு பண்ணை கருவிகளை வழங்கும் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா எம். முருகன்.

தமிழ்நாடு அரசு வேளாண் மற்றும் உழவர் நலத் துறை சார்பாக விவசாயிகளுக்கு உழவு இயந்திரம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூர் அரசு விதைப் பண்ணையில் தமிழ்நாடு அரசு வேளாண் மற்றும் உழவர் நலத் துறை சார்பாக விவசாயிகளுக்கு உழவு இயந்திரம் வழங்கும் நிகழ்ச்சி செம்பனார்கோவில் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் தாமஸ் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா எம். முருகன் கலந்து கொண்டு உழவர் உற்பத்தியாளர் குழுவை சார்ந்த கீழபெரும்பள்ளம், அரசூர்,அன்னவாசல் உள்ளிட்ட கிராமங்களில் உள்ள விவசாயிகளுக்கு 16 லட்சத்து 41 ஆயிரத்து 536 ரூபாய் மதிப்புள்ள 9 பண்ணைக் கருவிகளை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் நாகை வடக்கு மாவட்டம் துணைச் செயலாளர் ஞானவேலன், ஒன்றிய செயலாளர் அப்துல்மாலிக், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எம்எம். சித்திக் மற்றும் அரசு அலுவலர்கள் விவசாயிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!