தரங்கம்பாடி அருகே அ.தி.மு.க. பொன்விழா ஆண்டு இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

தரங்கம்பாடி அருகே  அ.தி.மு.க. பொன்விழா ஆண்டு இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
X

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார் கோயில் அ.தி.மு.க. பொன்விழா ஆண்டு இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.

தரங்கம்பாடி அருகே செம்பனார் கோயில் பகுதியில் அ.தி.மு.க. பொன்விழா ஆண்டு இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.

தமிழகம் முழுவதும் அ.தி.மு.க.வின் 50ஆம் ஆண்டு பொன்விழா இன்று தமிழகம் முழுவதும் அ.தி.மு.க.வினரால் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா செம்பனார்கோவில் தெற்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட எடுத்துக்கட்டி, சங்கரன்பந்தல், திருக்கடையூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது‌.

ஒன்றிய செயலாளர் வி.ஜி.கண்ணன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் எஸ்.பவுன்ராஜ் கலந்துகொண்டு அ.தி.மு.க. கொடியை ஏற்றி நலத்திட்ட உதவிகளை வழங்கினார். தொண்டர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.

அதனைத் தொடர்ந்து கட்சியின் ஆரம்பகால உறுப்பினர்களுக்கு சால்வை அணிவித்து கௌரவித்தார். பின்னர் கட்சி நிர்வாகிகளுக்கும், பொதுமக்களுக்கும் இனிப்புகளை வழங்கினார். இதில் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்