5 பவுன் நகைக்கடன் தள்ளுபடி செய்யக்கோரி விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டம்
கீழையூர் தொடக்க கூட்டுறவு கடன் சங்கம் முன் விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
2021-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின் போது தி.மு.க அளித்த வாக்குறுதியில் விவசாயிகளுக்கு 5 பவுன் நகைக்கடன் தள்ளுபடி செய்வதாக அறிவித்தது. இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா கீழையூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் 395 விவசாயிகள் நகைக் கடன் பெற்றுள்ளனர். இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை இந்த கூட்டுறவு சங்கக் கட்டடத்தில் தி.மு.க.வை சேர்ந்த 10 விவசாயிகளுக்கு மட்டும் நகை கடன் தள்ளுபடி செய்து தரப்பட்டுள்ளது.
மீதமுள்ள கீழையூர் நடுக்கரை, கிடாரங்கொண்டான் ஆகிய ஊராட்சிகளை சேர்ந்த நகைக்கடன் பெற்ற 385 விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி குறித்த அறிவிப்பு வெளியாகாததோடு, நகை கடன் தள்ளுபடி செய்த நபர்களின் பட்டியல் வெளியிடப்படவில்லை.
இதனை கண்டித்து கீழையூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க அலுவலக கட்டடம் முன்பு விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத் தலைவர் கபாடி.பாண்டியன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu