சீர்காழி அருகே 4 அடி நீளமுள்ள மண்ணுளிப்பாம்பு; வனத்துறையினர் மீட்பு

சீர்காழி அருகே 4 அடி நீளமுள்ள மண்ணுளிப்பாம்பு; வனத்துறையினர் மீட்பு
X

பிடிபட்ட மண்ணுளிப்பாம்புடன் வனத்துறையினர்.

சீர்காழி அருகே 4 அடி நீளமுள்ள மண்ணுளிப்பாம்பை வனத்துறையினர் பத்திரமாக மீட்டனர்.

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே காத்திருப்பு ஊராட்சியில் தேத்தாகுடி கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தின் வயல் பகுதியில் இருந்து சாலையோரம் 4 அடி நீளமுள்ள மண்ணுளிப் பாம்பு ஒன்று சென்றுள்ளது.

இதனை பார்த்த அப்பகுதி இளைஞர் அருள்தாஸ்(32) என்பவர் சீர்காழி வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தார், தகவலின்பேரில், வனத்துறை அலுவலர் குமரேசன் தலைமையில் வனக் காவலர்கள் அங்கு சென்றனர். உடனடியாக மண்ணுளிப் பாம்பை பத்திரமாக மீட்டு சீர்காழி வனத்துறை அலுவலகத்திற்கு கொண்டு வந்தனர். பின்னர், அந்த மண்ணுளி பாம்பை பாதுகாப்பாக வனப்பகுதியில் விட்டனர்.

Tags

Next Story