மணல் மேடு அருகே 22 செம்மறி ஆடுகள் மர்மமான முறையில் உயிரிழப்பு

மயிலாடுதுறை மாவட்டம் மணல் மேடு அருகே 22 செம்மறி ஆடுகள் மர்மமாக உயிரிழந்தது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு காவல் சரகம் புத்தகரம் நடுத்தெருவை சேர்ந்தவர் கலியபெருமாள் மகன் முனியாண்டி (48). இவரும் இவர்களது குடும்பத்தினரும் மூன்று தலைமுறைகளாக ஆடு வளர்ப்பில் ஈடுபட்டுள்ளனர். இதிலிருந்து கிடைக்கும் வருமானத்தைக் கொண்டு குடும்பம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது முனியாண்டி 150 செம்மறி ஆடுகளை வளர்த்து வருகிறார். நேற்று இரவு ஆடுகளை தனியாகவும் 22 குட்டி ஆடுகளை தனியாகவும் அடைத்து வைத்துள்ளார். இன்று காலை பார்த்தபோது 22 குட்டி செம்மறி ஆடுகளும் மர்மமான முறையில் இறந்து கிடந்தன. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த முனியாண்டி மணல்மேடு காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

அதன் பேரில் காவல்துறையினர் மற்றும் கால்நடை மருத்துவர் ராமபிரபா, கால்நடை வல்லுனர்கள் ஆடுகள் இறந்தது குறித்து ஆய்வு மேற்கொண்டுள்ளனர். தொடர்ந்து மணல்மேடு போலீசார் ஆடுகள் மர்மமான முறையில் இறந்தது குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். ஓரே நேரத்தில் 22ஆடுகள் இறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story
பெருந்துறையில் புகையிலை விற்பனைக்கு எதிராக கடைகளுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்