நடுக்கடலில் மோதல் சம்பவம்; 20 கிராம மீனவர்கள் 21ல் தொடர் போராட்டம்

நடுக்கடலில் மோதல் சம்பவம்; 20 கிராம மீனவர்கள் 21ல் தொடர் போராட்டம்
X

 வாணகிரியில் நடைபெற்ற சுருக்குமடி வலை எதிர்ப்பு மீனவர்களின் ஆலோசனைக் கூட்டம்.

சீர்காழி அருகே சுருக்குமடி வலையை தடைசெய்ய வலியுறுத்தி மீனவர்கள் 21 தேதி முதல் தொடர் போராட்டத்தை அறிவித்துள்ளனர்.

மயிலாடுதுறை மாவட்டம், பூம்புகார், திருமுல்லைவாசல் உள்ளிட்ட 5 கிராம மீனவர்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தடை செய்யப்பட்ட சுருக்கு மடி வலைகளை பயன்படுத்தி கடந்த 14ம் தேதி கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர். இதையறிந்த தரங்கம்பாடி, வாணகிரி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராம மீனவர்கள் பைபர் படகை எடுத்துக்கொண்டு கடலுக்கு சென்று தடுக்க விரைந்தனர்.

அப்போது நடுக்கடலில் இரு கிராம மீனவர்கள் இடையே கடும் மோதல் ஏற்பட்டதால் மூன்று மீனவர்கள் படுகாயமடநை்தனர். மேலும் படகுகள் சேதமடைந்தன.

இது தொடர்பாக மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த சுருக்குமடி வலை எதிர்ப்பு 20 கிராம மீனவர்களின் ஆலோசனைக் கூட்டம் வாணகிரியில் நடைபெற்றது.

கூட்டத்தில், அரசால் தடை செய்யப்பட்ட சுருக்கு மடி வலைகளை பயன்படுத்தி மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி வரும் 21-ஆம் தேதி மிகப்பெரிய ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். இந்த ஆர்ப்பாட்டத்தில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த 20 மீனவ கிராமங்கள் மற்றும் நாகை, காரைக்கால் மாவட்ட மீனவர்கள் கலந்துகொள்வார்கள் என தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர்.

மேலும் மயிலாடுதுறை ஆட்சியர் லலிதாவை 20 கிராம மீனவர்களும் சந்தித்து கூட்டத்தில் நிறைவேற்றிய தீர்மானத்தின் மீது நடவடிக்கை எடுக்கவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்நிலையில், மயிலாடுதுறை மாவட்டத்தில் சுருக்குவலை பயன்படுத்தும் மீனவர்களுக்கும், அதனை எதிர்க்கும் மீனவர்களுக்கும் இடையே மோதல் ஏற்படும் சூழல் எழுந்துள்ளதால், கடலோர கிராமங்களில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!