அரவைக்காக தருமபுரி மாவட்டத்திற்கு 2 ஆயிரம் டன் நெல்மூட்டைகள் அனுப்பி வைப்பு

அரவைக்காக  தருமபுரி மாவட்டத்திற்கு  2 ஆயிரம் டன்  நெல்மூட்டைகள் அனுப்பி வைப்பு
X

மயிலாடுதுறையிலிருந்து ரயில் மூலம் தருமபுரிக்கு அனுப்பிவைக்கப்படும் நெல்மூட்டைகள்   

கொள்முதல் நிலையங்களில் இருந்து உடனுக்குடன் நெல்மூட்டைகள எடுத்து செல்லப்படுவது விவசாயிகளிடம் வரவேற்பை பெற்றுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டத்தில் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்ட 2 ஆயிரம் டன் குறுவை நெல் மூட்டைகள் அரவைக்காக ரயில் மூலம் தருமபுரி மாவட்டத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டன.

மயிலாடுதுறை மாவட்டத்தில் தற்போது குறுவை அறுவடை பணிகள் தொடங்கியுள்ளது. ஆனால் கடந்த சில நாட்களாக தினமும் மாலை, இரவு நேரங்களில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருவதால், குறுவை அறுவடை பணிகள் பாதிப்பதுடன், அறுவடை செய்த நெல்லை பாதுகாக்க முடியாமல் விவசாயிகள் சிரமப்பட்டு வருகின்றனர்.மயிலாடுதுறை மாவட்டத்தில் அரசு நேரடி நெல்கொள்முதல் நிலையங்கள் படிப்படியாக தற்போது திறக்கப்பட்டு நெல் கொள்முதல் செய்யும் பணிகளும் தொடங்கியுள்ளது.

விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படும். நெல் மூட்டைகள் மழையில் சேதமடையாமல் பாதுகாப்பாக கிடங்குகளுக்கு கொண்டு செல்வதற்கான நடவடிக்கையிலும் மாவட்ட நிர்வாகம் ஈடுபட்டு வருகிறது. மயிலாடுதுறை மாவட்டத்துக்குள்பட்ட மயிலாடுதுறை, குத்தாலம், சீர்காழி, தரங்கம்பாடி தாலுகாக்களில் நேரடி நெல்கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்ட 2 ஆயிரம் டன் நெல் மூட்டைகள் லாரிகள் மூலம் மயிலாடுதுறை ரயில் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டு, அங்கிருந்து ரயில் வேகன்களில் ஏற்றி, அரவைக்காக அனுப்பி தருமபுரி மாவட்டத்திற்கு வைக்கப்பட்டுள்ளன. கொள்முதல் நிலையங்களில் இருந்து உடனுக்குடன் நெல்மூட்டைகள எடுத்து செல்லப்படுவது விவசாயிகளிடம் வரவேற்பை பெற்றுள்ளது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!