சீர்காழியில் புதிய வழித்தடத்தில் 2 நகரப் பேருந்து சேவை தொடக்கம்

சீர்காழியில் புதிய வழித்தடத்தில்  2 நகரப் பேருந்து சேவை தொடக்கம்
X
சீர்காழியில் இருந்து முக்கிய வழித்தடங்களில் நகர பேருந்து சேவை தொடங்கி வைக்கப்பட்டது.
சீர்காழியில் இருந்து முக்கிய வழித்தடங்களில் 2 நகர பேருந்து சேவையை சட்டமன்ற உறுப்பினர்கள் தொடங்கி வைத்தனர்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் இருந்து புத்தூர் மாதானம் வழியாக பழையார்பகுதிக்கும், அதேபோல் சீர்காழியிலிருந்து, காத்திருப்பு, செம்பதனிருப்பு, வழியாக திருவிடைக்கழி ஆகிய பகுதிக்கும் முன்பு நகர பேருந்து இயங்கிக்கொண்டிருந்தது.

கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக இப்பேருந்து இயக்கம் நிறுத்தப்பட்டதால் பொதுமக்கள், பேருந்து பயணிகள் அவதி அடைந்தனர். இதனையடுத்து நிறுத்தப்பட்ட பேருந்து மீண்டும் இயக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. அதன்படி இரண்டு புதிய வழித்தட நகரப் பேருந்துகள் மீண்டும் இயக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு சீர்காழி கோட்டாட்சியர் நாராயணன் தலைமை வகித்தார். புதிய வழித்தட பேருந்துகளை தி.மு.க. மாவட்ட செயலாளரும் , பூம்புகார் சட்டமன்ற உறுப்பினருமான நிவேதா எம். முருகன், சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

இவ்விழாவில் சீர்காழி நகர செயலாளர் சுப்பராயன், ஒன்றிய செயலாளர்கள் பிரபாகரன், சசிகுமார், மலர்விழி திருமாவளவன், செல்ல சேது ரவிக்குமார், கொள்ளிடம் ஒன்றிய பெருந்தலைவர் ஜெயப்பிரகாஷ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்