ஒரு வாரவேலைக்கு 100 நாள் பில்லா? ஆத்திரமடைந்த பொதுமக்கள் சாலை மறியல்

ஒரு வாரவேலைக்கு 100 நாள் பில்லா? ஆத்திரமடைந்த பொதுமக்கள் சாலை மறியல்
X
மயிலாடுதுறை அருகே காளி ஊராட்சியில் 100 நாள் வேலையில் அதிகாரிகள் செயலால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் சாலை மறியல்.

மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறையை அடுத்த காளி ஊராட்சியில் கடந்த ஒருமாத காலமாக 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் வேலை தினமும் நடைபெற்றுள்ளது.100 நாள் வேலையில் இந்த ஒரு மாதத்தில் ஒரு வாரம் மட்டும் தான் வேலை வழங்கப்பட்டது என்று 100 நாள் வேலை புரியும் பொதுமக்கள் கூறுகின்றனர்.

இதுதொடர்பாக அதிகாரியிடம் வேலைபுரியும் மக்கள் கேட்டபோது வேலைத் திட்டத்தின் கீழ் இப்பகுதியில் இப்பொழுது வேலை இல்லை என்று அதிகாரிகள் கூறியுள்ளனர். ஆனால் ஒருமாத காலமாக வேலை நடைபெற்றதாக அனைவரின் பெயரிலும் பில் போடப்பட்டு ஊதியம் கொடுக்கப்பட்டதாக தெரிவித்ததைத் தொடர்ந்து ஆத்திரமடைந்த பொதுமக்கள் காளி ஊராட்சியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்த மணல்மேடு காவல்துறையினர் விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அடுத்த வாரத்தில் இருந்து 100 நாள் வேலை நடைபெறும் என்று உத்தரவாதம் கொடுத்தனர். இதனால் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு சென்றனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!