ஸ்டாலின் முதல்வராக உழைக்க வேண்டும்- திமுக தீர்மானம்

ஸ்டாலின் முதல்வராக உழைக்க வேண்டும்- திமுக தீர்மானம்
X

மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் சட்டமன்ற தொகுதியில் திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது.

மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் சட்டமன்ற திமுக செயற்குழு கூட்டம் மயிலாடுதுறை மாவட்ட திமுகழக அலுவலகத்தில் நடைபெற்றது. பூம்புகார் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளரும் நாகை வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளருமான நிவேதா முருகன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் சட்டமன்ற தேர்தலில் சிறப்பாக பணியாற்றி, திமுக சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளர் நிவேதா முருகன் மற்றும் சீர்காழி சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் பன்னீர் செல்வத்தையும் அதிகப்படியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற செய்வது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது

இதை தொடர்ந்து நிவேதா முருகன் பேசும் போது, திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திமுக தலைவர் ஸ்டாலின் முதல்வராக வர வேண்டும். அதற்கு அனைவரும் உழைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். கூட்டத்தில் தேர்தல் பணியை சிறப்பாக ஆற்ற பல ஆலோசனைகளை வழங்கினார் . இதில் பேரூர் நகர திமுக நிர்வாகிகள் மற்றும் திமுக தொண்டர்கள் 200 கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
அரசு புறம்போக்கு நிலத்தில் சாலை அமைப்பது..! ஆலை நிர்வாகத்துக்கு விவசாயிகளின் கடும் எதிர்ப்பு..!