குண்டும் குழியுமாக மாறிய சாலை, தொடரும் விபத்துக்கள் !

சீர்காழியில் குண்டும் குழியுமாக மாறிய சாலைகளால் தொடர்ந்து விபத்துக்கள் ஏற்பட்டு வருகின்றன.

தமிழகத்தில் பெய்த தொடர் கனமழை காரணமாக மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகாவில் தேசிய நெடுஞ்சாலை மற்றும் கிராமப்புற சாலைகள் குண்டும் குழியுமாக மாறி மோசமான நிலையில் உள்ளதால் வாகன ஓட்டிகள் பெரும் இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர். இதனால் இருசக்கர வாகனத்தில் செல்வோர் தினந்தோறும் சாலை விபத்தில் சிக்கி உயிர் இழப்பு ஏற்பட்டும், கை கால் முறிவு ஏற்பட்டும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் சீர்காழியில் இருந்து மயிலாடுதுறை, சிதம்பரம்,நாகப்பட்டினம், காரைக்கால் செல்லக்கூடிய தேசிய நெடுஞ்சாலைகளிலும், சீர்காழி,கொள்ளிடம்,வைத்தீஸ்வரன்கோவில், பூம்புகார், பழையார்,வடரங்கம், உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்கு செல்லக்கூடிய கிராம சாலைகளும் குழியுமாக பள்ளமாக உள்ளதால் இரவில் செல்லும் இரு சக்கர வாகன ஓட்டிகள் சாலைகளில் குழி இருப்பது தெரியாமல் குடும்பத்துடன் செல்லும் போது சாலையிலுள்ள பள்ளத்தில் விழுந்து காயத்துடன் செல்கின்றனர். எனவே உடனடியாக மாவட்ட நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் சாலையை சீரமைத்து வாகன ஓட்டிகளுக்கும், பொதுமக்களுக்கும் பயன்படும் வகையில் சாலையை விரைந்து சீரமைத்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!