/* */

மஞ்சள்பை அவமானமல்ல: விழிப்புணர்வு இயக்கத்தை துவக்கிவைத்தார் ஸ்டாலின்

தமிழகத்தில் பிஸாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும்; மஞ்சள் பை என்பது அவமானமல்ல என்று, முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார்.

HIGHLIGHTS

மஞ்சள்பை அவமானமல்ல: விழிப்புணர்வு இயக்கத்தை துவக்கிவைத்தார் ஸ்டாலின்
X

சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவுக்கும் பிளாஸ்டிக்கை ஒழிக்கவும், அதற்கு மாற்றாகவும் மஞ்சள் பை விழிப்புணர்வு இயக்கத்தை தமிழக அரசு மேற்கொண்டுள்ளது. சென்னையில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றான கண்காட்சியை தொடங்கி வைத்தார். அத்துடன், மஞ்சப்பை விழிப்புணர்வு இயக்கத்தைத் தொடங்கி வைத்து, அவர் பேசியதாவது:

பிளாஸ்டிக் பைகள் சுற்றுச்சூழலுக்குக் கேடு விளைவிக்கும் தன்மை கொண்டவை. சுற்றுச்சூழலுக்கு மாசு விளைவிக்கும் பிஸாஸ்டிக் பயன்பாட்டை நாம் குறைக்க வேண்டும். மஞ்சப்பைதான் சுற்றுச்சூழலுக்கு ஏற்றது. மஞ்சப்பை அவமானம் அல்ல. அழகான நிறத்தை குறிக்கிறது.


பிளாஸ்டிக்கை மண்ணில் போட்டால், அது மக்குவதற்கு பல ஆண்டுகள் ஆகும். இதனால் மண் வளம் பாதித்து, விவசாயமும் பாதிக்கப்படுகிறது. பிளாஸ்டிக் பைகளை உண்டு கால்நடைகள் உயிரிழக்கின்றன.
எனவே பிளாஸ்டிக் பயன்பாட்டைத் தவிர்க்க, அரசு பல நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. அதன்படி, 14 வகையான பிஸாஸ்டிக் பொருட்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக, சமூக வலைதளங்களிலும் இடைவிடாது பரப்புரை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மக்கள் நினைத்தால் மாற்றத்தை கொண்டு வரலாம். அனைத்திலும் முன்னோடியாக இருக்கும் தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பிலும் முன்னோடியாகத் திகழ வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.அ
Updated On: 23 Dec 2021 8:00 AM GMT

Related News