மக்கள் மருந்தகத்தில் எவ்வளவு குறைவாக மருந்துகள் கிடைக்கிறது தெரியுமா..? தெரிஞ்சுக்கங்க..!
Makkal Marundhagam
Makkal Marundhagam-இந்தியாவில் ஜன் ஆஸாதி என்கிற மக்கள் மருந்தகம் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கி வைத்தார். ஏழை, எளிய மக்களுக்கு குறைந்த விலையில் உயிர் காக்கும் மருந்துகள் கிடைக்க வேண்டும் என்பதே இதன் முக்கிய நோக்கமாகும். அந்த வகையில் மக்கள் மருந்தகம் கடைகளில் வெளி மார்க்கெட்டில் விற்கப்படும் ரூ. ஆயிரம் மதிப்புள்ள மருந்துகள் குறைந்த விலையில் அதாவது ரூ. 400 க்கு கிடைக்கிறது.
ஆனால், அரசு நடத்தும் மக்கள் மருந்தகம் பற்றிய விழிப்புணர்வு பலரிடம் இல்லாததால், தனியார் மருந்தகங்களில் இருந்து பிராண்டட் மருந்துகளை ஆயிரக்கணக்கில் செலவழித்து வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். நோயாளிகளுக்கு உயிர்காக்கும் மருந்துகளை, தொடர்ந்து கொள்முதல் செய்யும் மக்கள் கூறும் போது, இந்த மக்கள் மருந்தகம் திட்டம் பெரும்பாலான மக்களுக்கு போய்ச் சேரவில்லை. இந்த திட்டம் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டும். மக்களுக்கு பயனுள்ள திட்டம் என்பதால் மக்கள் வரவேற்பு பெறும் என்று கூறினார்கள்.
மக்கள் மருந்தகத்தில் (மக்கள் மருந்தகம்) விற்பனை செய்யப்படும் மருந்துகள் மலிவான தரம் கொண்டவை என்றும், செயல்திறன் இல்லாதவை என்றும் பிரசாரம் செய்வதும் மக்கள் ஆதரவின்மைக்குக் காரணம் என்று தமிழ்நாடு மருந்தாளுநர் சங்கத்தினர் கூறுகின்றனர்.
குறைந்த விலையில் வரும் இந்த மருந்துகள் குறித்து அரசு போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என வாடிக்கையாளர்கள் கூறுகின்றனர். இந்த கடைகளை அரசு ஊக்குவிக்காத வரையில், அதன் நோக்கம் நிறைவேறாது.
மக்கள் மருந்தகம் 2008ம் ஆண்டு மத்திய அரசின் ஜன் ஜன் ஆஸாதி திட்டத்தின் கீழ் தொடங்கப்பட்டது. ஏழை மற்றும் பிற்படுத்தப்பட்டோருக்கு மருத்துவச் செலவைக் குறைக்கும் வகையில் தரமான ஜெனரிக் மருந்துகளை மலிவு விலையில் வழங்குவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
மக்களுக்கு பல்வேறு நோய்களுக்கான மருந்துகள் வழங்கப்பட்டு வருகிறது. எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை மருந்துகள், 90 சதவீத பிஎம்டி நோயாளிகளுக்கு சைக்ளோஸ்போரின் என்ற நோயெதிர்ப்புத் தடுப்பு மருந்து பரிந்துரைக்கப்படுகிறது. இதன் விலை தனியார் மருந்தகங்களில் ரூ. 350 ஆகும், ஆனால், இது சுமார் மக்கள் மருந்தகத்தில் ரூ.120 முதல் ரூ.130 வரை குறைந்த விலையில் கிடைக்கிறது. பல உயிர்காக்கும் மருந்துகளும் இப்படி குறைந்த விலையில் கிடைக்கிறது.
தமிழ்நாடு மருந்தாளுனர்கள் முன்னேற்றச் சங்கத்தின் மாநிலத் தலைவர் பி.செல்வமணி கூறும்போது,'பிராண்டட் பாராசிட்டமாலின் விலை ரூபாய் 1 மட்டுமே. ஆனால், இந்த மாத்திரை மக்கள் மருந்தகங்களில் ஒரு பொதுவான மருந்தாக விற்கப்படும்போது, அது சுமார் 10 பைசா அல்லது அதற்கு மேல் விற்கப்படுகிறது. குறைந்த விலைக்கு விற்பனை செய்வதே மக்கள் மருந்தகங்களில் நீக்கம். அவ்வாறு, குறைந்த விலைக்கு வருவதால், இது மலிவான தரம் உடையது என்று மக்கள் நினைக்கிறார்கள்.
இவ்வாறு தவறாக செய்யப்படும் பிரசாரம் பல தனியார் மருந்தகங்கள் பிராண்டட் மருந்துகளை விளம்பரப்படுத்த உதவுகிறது என்கிறார் செல்வமணி.
அவர் கூறுவதைப் போலவே, மக்கள் மருந்தகங்கள் குறித்த விழிப்புணர்வு மற்றும் இந்த திட்டம் குறித்த செயல்பாடுகளை அரசு மக்களிடம் கொண்டு சேர்க்க நடவடிக்கைகள் எடுக்கவேண்டும். மக்களுக்கு பயனாக உள்ள ஒரு திட்டம் தவறானவர்களால் திசை திருப்பப்படுகிறதோ என்ற ஐயம் ஏற்படுகிறது.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu