மதுரை அருகே, ரஜினிக்கு சிலை வைத்து பூஜிக்கும் இளைஞர்!

மதுரை அருகே, ரஜினிக்கு சிலை வைத்து பூஜிக்கும் இளைஞர்!
X

மதுரை அருகே, ரஜினிக்கு சிலை வைத்து பூஜைக்கு இளைஞர்.

மதுரை அருகே, இளைஞர் ஒருவர் ரஜினிக்கு சிலை வைத்து பூஜித்து வருகிறார்.

ரஜினி கோவிலில் மஹா சிவராத்திரி: ரஜினியை குலதெய்வமாக வழிபடும் ரசிகர்!

மதுரை மாவட்டம், திருமங்கலத்தில் ரஜினிகாந்த் ரசிகர் ஒருவர், ரஜினிக்கு கோவில் கட்டி, ரஜினியை குலதெய்வமாக வழிபட்டு வருவது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

கார்த்திக் (45) என்ற அந்த ரசிகர், திருமங்கலத்தில் திருமண தகவல் மையம் நடத்தி வருகிறார். பல வருடங்களாக ரஜினிகாந்தை கடவுளாகவும், தனது குருவாகவும் எண்ணி வழிபட்டு வருகிறார்.


அதற்காக, தனது வாடகை வீட்டில் ஒரு முழு அறையை ரஜினி கோவிலாக மாற்றியுள்ளார். அந்த அறையின் சுவர்களில் ரஜினிகாந்த் நடித்த படங்களின் முழு உருவ படங்கள் ஒட்டப்பட்டுள்ளன.

கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு, 50 கிலோ எடை கொண்ட கருங்கல்லில் செய்யப்பட்ட ரஜினிகாந்தின் முழு உருவ சிலைக்கு கும்பாபிஷேகம் நடத்திய கார்த்திக், இன்று மஹா சிவராத்திரி தினத்தை முன்னிட்டு ரஜினிகாந்த் சிலைக்கும், அவரது முழு உருவப்படத்திற்கும் சிறப்பு அபிஷேகம் நடத்தினார்.


பால், பன்னீர், சந்தனம், மஞ்சள், இளநீர், தயிர் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு, ரஜினிகாந்த் சிலைக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இரவு முழுவதும் தொடர் வழிபாடு நடத்தப்பட உள்ளது.

"தனக்கும் தனது குடும்பத்தினருக்கும் ரஜினிகாந்த் கடவுளாக தோன்றுவதாகவும், அவரை குலதெய்வமாக வழிபட்டு வருவதாகவும்" கார்த்திக் கூறினார்.

பொதுமக்கள் அனைவரும் தங்களது குலதெய்வத்தை மஹா சிவராத்திரி தினத்தில் குடும்பத்துடன் சென்று வழிபடுவது போல், கார்த்திக் ரஜினிகாந்தை குலதெய்வமாக வழிபட்டு வருவது வினோதமாகவும், பக்தி ததும்பும் வகையிலும் அமைந்துள்ளது.

ரஜினிகாந்த் ரசிகர்கள் மத்தியில் கார்த்திக்கின் இந்த செயல் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

Tags

Next Story
பழனி கோயில் நிர்வாகம் 3,134 மூட்டைகள் கரும்பு சா்க்கரை கொள்முதல் செய்தது