வாடிப்பட்டியில் சுய உதவிக்குழுவினர் சார்பில் மகளிர் தினவிழா
வாடிப்பட்டியில் நடைபெற்ற மகளிர் தினவிழா
மதுரை மாவட்டம், வாடிப்பட்டியில் தேசிய நகர்புற வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் மகளிர் தின விழாவில் திரளான மகளிர் பங்கேற்றனர்.
மதுரை மாவட்டம், வாடிப்பட்டி பேரூராட்சியில் தேசிய நகர்புற வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது. திட்ட இயக்குனர் காமேஷ் பேரூராட்சி தலைவர் பால்பாண்டியன் தலைமை வகித்தனர். முன்னாள் பேரூராட்சி தலைவர் கிருஷ்ணவேணிபால்பாண்டியன், துணைத் தலைவர் கார்த்தி, உதவி திட்ட அலுவலர்கள் வெல்லம்மாள் மரியம் முன்னிலை வகித்தனர்.
சமுதாய அமைப்பாளர் திருநாவுக்கரசு நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார். சமூக வள பயிற்றுநர்கள் குமாரி, செல்வி, வாடிப்பட்டி பகுதியைச் சார்ந்த வங்கி மேலாளர்கள், 70 சுய உதவி குழுவை சேர்ந்த மகளிர்கள், பேரூராட்சி செயல் அலுவலர் உள்ளிட்ட பணியாளர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். தமிழக அரசு மகளிருக்கு அளித்துள்ள திட்டங்கள் குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. விழாவில் பள்ளி மாணவியரின் நடன நாட்டிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
தமிழக அரசு மகளிருக்கு அளித்துள்ள திட்டங்கள்: மகளின் நலன் தொடர்பான அறிவிப்பில், மிக முக்கிய அறிவிப்பாக, மகளிர் அரசு ஊழியர்களுக்கான மகப்பேறு கால விடுப்பு காலம், 9 மாதங்களிலிருந்து 13 மாதங்களாக உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு, 2021, ஜூலை 1ம் தேதி முதல், முன் தேதியிட்டு அமல்படுத்தப்படும்
தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதியான, இல்லத்தரசிகளுக்கு ரூ.1,000 வழங்கும் திட்டம் குறித்துப் பேசிய நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், குடும்பத் தலைவர் பெண்ணாக இருந்தால் மட்டுமே உதவித் தொகை கிடைக்கும் என்பது தவறான புரிதல். உதவித் தொகை என்பது இல்லத்தரசிகளுக்கானது என்பதால், குடும்பத்தலைவர் பெயரை மாற்றத் தேவையில்லை எனவும், இல்லத்தரசிகளுக்கு ரூ.1,000 உதவித் தொகை வழங்கும் திட்டம் வரும் நிதி நிலை அறிக்கையில் அறிவிக்கப்படவுள்ளது.
மகளிருக்கான பிற திட்டங்களில், மகளிர் இலவச பயணத்திற்கு மானிய நிதி ஒதுக்கீடு ரூ.703 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.5,500 கோடி சிறப்பு கொரோனா கடன் உட்பட ரூ.20 ஆயிரம் கோடி கடன் உதவி உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், மகளிர் சுய உதவி குழுக்களுக்கு வழங்கப்பட்ட ரூ.2,756 கோடி கடன் தள்ளுபடி செய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.இது தவிர, மகளிர் கல்வி முன்னேற்றத்தை ஊக்குவிக்க ரூ.762.23 கோடியில் திட்டங்கள் செயல்படுத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu