உசிலம்பட்டி அருகே மந்தையம்மன் ஆலய திருவிழாவில் முளைப்பாரி எடுத்த பெண்கள்

உசிலம்பட்டி அருகே மந்தையம்மன் ஆலய திருவிழாவில் முளைப்பாரி எடுத்த பெண்கள்
X

உசிலம்பட்டி அருகே மந்தையம்மன் ஆலய  திருவிழாவில் பெண்கள் முளைப்பாரி எடுத்து சென்றனர்.

உசிலம்பட்டி அருகே மந்தையம்மன் ஆலய திருவிழாவில் பெண்கள் முளைப்பாரி எடுத்தனர்.

உசிலம்பட்டி அருகே மந்தை அம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு, பெண்கள் முளைப்பாரி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே சடையாண்டிபட்டி கிராமத்தில் மந்தை அம்மன் கோவில் அமைந்துள்ளது.

இங்கே, ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதம் மந்தை அம்மன் கோவில் திருவிழா கிராம பொதுமக்கள் சார்பில் நடத்தப்படுகிறது. இதில், மூன்று நாள் திருவிழா கொண்டாடப்படுகிறது.


இதில், முதல் நாள் விளக்கு பூஜையும், இரண்டாம் நாள் அம்மனுக்கு கரகம் எடுத்தல் நிகழ்ச்சியும், மூன்றாம் நாள் தீச்சட்டி எடுத்தல், முளைப்பாரி எடுத்தல், பொங்கல் வைக்கும் நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து, பொதுமக்கள் பெண்கள் மந்தை அம்மன் கோவில் முன்பு முளைப்பாரியை வைத்து கும்மி பாட்டு பாடல் பாடி கும்மி அடித்தனர் .

அதனைத்தொடர்ந்து, ஊர்வலமாக எடுத்துச் சென்று முளைப்பாரியை அருகிலுள்ள குளத்தில் கரைத்தனர்.

இதில், கிராமத்தில் உள்ள பொதுமக்கள் அம்மனை தரிசனம் செய்து வழிபட்டனர். இதனால், ஒவ்வொரு ஆண்டும் மழை பெய்து விவசாயம் செழிக்கும் என்பது இங்குள்ள கிராம மக்களின் நம்பிக்கையாக உள்ளது.

Tags

Next Story
மொளசி கலைஞர் கனவு இல்லம் கட்டுமான பணியை ஆட்சியர் ஆய்வு..!