சோழவந்தான் அருகே குழந்தைகளுக்கு ஆபத்தை ஏற்படத்தக்கூடிய பள்ளம் சீரமைக்கபடுமா

சோழவந்தான் அருகே குழந்தைகளுக்கு ஆபத்தை  ஏற்படத்தக்கூடிய  பள்ளம் சீரமைக்கபடுமா
X

சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளம் ஊராட்சியில் அங்கன்வாடி முன்பு தோண்டப்பட்ட பள்ளத்தால், குழந்தைகளுக்கு ஆபத்து ஏற்படும் சூழல் உள்ளது

இந்தப் பகுதியில் செல்லும் பேருந்துகள் சாலையை விட்டு கீழே இறங்கும்போது விபத்து ஏற்பட கூடிய வாய்ப்பும் உள்ளது

சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளம் ஊராட்சியில் அங்கன்வாடி முன்பு தோண்டப்பட்ட பள்ளத்தால், குழந்தைகளுக்கு ஆபத்து ஏற்படும் சூழல் உள்ளதை கருத்தில்கொண்டு மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளம் கிராமத்தில், அங்கன்வாடி மையக் கட்டிடம் உள்ளது. இதில், முள்ளிபள்ளம் கிராமத்தை சேர்ந்த குழந்தைகள் கல்வி பயின்று வருகிறார்கள்.இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு அங்கன்வாடி கட்டிடத்திற்கு முன்பாக மூன்று அடி அகலத்தில் சுமார் 4 அடிக்கு மேலாக நெடுஞ்சாலை துறையால் பள்ளம் தோண்டப்பட்டு கடந்த பத்து நாட்களுக்கும் மேலாக மூடப்படாமல் இருந்துவருகிறது. இதனால், குழந்தைகள் அங்கன்வாடி செல்ல முடியாமல் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.

இதுகுறித்து, முள்ளிப்பள்ளம் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் மார்நாட்டான் கூறியதாவது:கடந்த 10 நாட்களுக்கு முன்பு இங்குள்ள அங்கன்வாடி மையம் முன்பு நெடுஞ்சாலைத்துறை பள்ளம் தோண்டி விட்டு சென்றது. இதுவரை பள்ளத்தை மூடுவதற்கோ மேற்கொண்டு வேலைகள் செய்யவோ, எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால், இங்கு பயின்று வரும் குழந்தைகளுக்கு மிகவும் ஆபத்தை விளைவிக்க கூடிய சூழல் நிலவுகிறது. இந்த பள்ளத்தை உடனடியாக மூடினால் தான் தங்கள் குழந்தைகளை அனுப்ப முடியும் என்று இந்த பகுதி பெற்றோர்கள் முடிவு செய்துள்ளனர்.

வசதி படைத்தவர்கள் தங்களது குழந்தைகளை ஆங்கிலப் பள்ளியில் படிக்க வைக்கின்றனர். ஏழை மக்கள் பயன்பெறும் வகையில் குழந்தைகளுக்காக அங்கன்வாடி மையம் செயல்பட்டு வந்தது. கடந்த பத்து நாட்களுக்கு முன்பாக மூன்று அடி அகலத்தில் சுமார் 4 அடிக்கு மேலாக பள்ளம் தோண்டப்பட்டு மூடப்படாமல் இருக்கிறது. இதனால், குழந்தைகள் தவறி விழ வாய்ப்பு உள்ளது.இதுகுறித்து, அதிகாரிகளிடம் முறையிட்டும் எந்தவித நடவடிக்கையும் இல்லை. உடனடியாக பள்ளத்தை மூடாவிட்டால் விபத்து ஏற்படும் வாய்ப்பு உள்ளது.

மேலும், இந்தப் பகுதியில் செல்லும் பேருந்துகள் சாலையை விட்டு கீழே இறங்கும்போது விபத்து ஏற்பட கூடிய வாய்ப்பும் உள்ளது. எனவே, மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு, இந்த பள்ளத்தை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்