தமிழகத்தில் மீண்டும் புரட்சிப் பயணம் தொடங்குவேன்: ஓபிஎஸ்
மதுரையில், முன்னாள் முதல்வர் ஒபிஎஸ் பேட்டி.
தமிழகம் முழுவதும் மீண்டும் புரட்சி பயணத்தை தொடங்குவேன் என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
மதுரை நாகமலைபுதுக்கோட்டை பகுதியில், உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற தனது ஆதரவாளர் இல்ல திருமண விழாவில் கலந்து கொண்ட முன்னால் முதல்வர் ஒ. பன்னீர்செல்வம் மணமக்களை வாழ்த்தினார்.
பின்னர், செய்தியாளர்களை சந்தித்து அவர் பேசியதாவது:தொண்டர்களின் விருப்பத்தின்படி உங்களிடம் சொல்லிவிட்டு தான் மீண்டும் புரட்சி பயணத்தை தொடங்க உள்ளேன்.
சனாதனம் பற்றி அதிமுக ஆதரவு தெரிவித்துள்ளது குறித்த கேள்விக்கு. ஏற்கெனவே, இது பற்றி விரிவான அறிக்கை வெளியிட்டுள்ளேன்.
பல்லடம் கொலை வழக்கு குறித்த கேள்விக்கு.பல்லடம் கொலை வழக்கு சம்பந்தமாக அரசிற்கு உரிய நபர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கடுமையான கண்டனத்தை தெரிவித்துள்ளேன்.இன்று அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது அதுகுறித்த கேள்விக்கு. இன்று நடைபெறுவது அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் அல்ல, அது கும்பல்.ஸ்டாலின் கூறுவதையெல்லாம் ஒரு கருத்தாகவே எடுத்துக்கொள்ள கூடாது.
இந்தியா பெயர் பாரத் என பெயர் மாற்றம் குறித்து தாங்கள் ஆதரவு தெரிவிப்பீர்களா என்ற கேள்விக்கு. அது குறித்த முழுமையான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வரவில்லை வந்த பிறகு அது குறித்து பேசலாம் என்றார் ஒபிஎஸ்..
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu