விக்கிரமங்கலம் அருகே கல்லால் தாக்கி மனைவி கொலை: கணவன் தலைமறைவு

விக்கிரமங்கலம் அருகே கல்லால் தாக்கி மனைவி கொலை: கணவன் தலைமறைவு
X

கொலை செய்யப்பட்ட பாண்டியம்மாள்.

சோழவந்தான் அருகே மனைவியை கல்லால் தாக்கி காென்றுவிட்டு தப்பியோடிய கணவனை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே விக்கிரமங்கலம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட தெப்பத்துப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பெருமாள் வயது 30. அவரது மனைவி பாண்டியம்மாள் வயது 23. இவர்களுக்கு 8 வயதில் பெண் குழந்தையும் 3 வயது ஆண் குழந்தையும் உள்ளனர் .

பெருமாள் டிரைவராக வெளியூர்களுக்கு சென்று வேலை பார்த்து வந்ததால் அடிக்கடி கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில், பாண்டியம்மாள் தோட்டத்தில் தக்காளி பறித்து கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த பெருமாள் பாண்டியம்மாள் தலையில் கல்லால் தாக்கி விட்டு அங்கிருந்து தப்பி சென்றுவிட்டார். இதில், நிலைகுலைந்த பாண்டியம்மாள் கீழே விழுந்து உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தார்.

இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அருகிலிருந்தவர்கள் அவரை ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல், பாண்டியம்மாள் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து, விக்கிரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய பெருமாளை வலைவீசி தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story
மறியலில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் 640 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு