ஆவினுக்கு செல்லும் பாலில் தண்ணீரா? கையும் களவுமாக பிடித்த அதிகாரிகள்

ஆவினுக்கு செல்லும் பாலில் தண்ணீரா? கையும் களவுமாக பிடித்த அதிகாரிகள்
X
உசிலம்பட்டி அருகே ஆவினுக்கு செல்லும் பாலில் தண்ணீர் கலப்பதை கையும் களவுமாக அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

உசிலம்பட்டி அருகே, ஆவீனுக்கு செல்லும் பால் கேன்களில் தண்ணீர் கலந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பாலில் தண்ணீர் கலந்து கொண்டிருந்த போது அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து கண்டுபிடித்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே கொப்பம்பட்டி கிராமத்தில், உள்ள ஆவின் பால் உற்பத்தி நிலையத்திலிருந்து, தினசரி மதுரை ஆவினுக்கு 30-க்கும் மேற்பட்ட கேன்களில் பால் கொண்டு செல்லப்படுகிறது.

கடந்த சில மாதங்களாக இந்த மையத்திலிருந்து ஆவினுக்கு கொண்டு வரப்படும் பால் தரமற்ற நிலையில் உள்ளதாக புகார் எழுந்த சூழலில் அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்தனர்.

இந்த ஆய்வின்போது மக்களிடமிருந்து பெறப்படும் பாலை மதுரை ஆவினுக்கு கொண்டு செல்லும் வழியில் நிறுத்தி தண்ணீர் கலப்பதை கண்டறிந்து அதிர்ச்சியடைந்த அதிகாரிகள் வாகன ஓட்டுநரிடமிருந்து, தண்ணீர் மற்றும் தண்ணீர் கலந்த பாலையும் பறிமுதல் செய்தனர்.

இந்த பாலில் தண்ணீர் கலந்த வீடியோ மற்றும் அதிகாரிகள் ஆய்வு செய்த காட்சிகள் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.

Tags

Next Story
ai in future agriculture