உசிலம்பட்டி அருகே கறுப்புக்கொடி கட்டி கிராம மக்கள் போராட்டம்
போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள்.
சோழவந்தான் அருகே, செல்லம்பட்டி ஒன்றியம் முதலைகுளம் ஊராட்சி, கீழப்பட்டி கிராமத்தில் அருந்ததியர் மயானத்துக்கு சாலை வசதி மற்றும் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி வீடுகளில் கறுப்புக்கொடி ஏற்றி காத்திருப்பு போராட்டம் நடத்தினர். ஆதித்தமிழர் கட்சி நிர்வாகி அறிவழகன் தலைமையில் இந்த போராட்டம் நடைபெற்றது.
தகவலறிந்த உசிலம்பட்டி வட்டாட்சியர் விஜயலட்சுமி, சம்பவ இடத்திற்கு சென்று போராட்டக் குழுவினரிடம் மயானத்திற்கு செல்லக்கூடிய பாதை பணிகள் முறையாக நடந்து வருகிறது. விரைவில் தங்களது கோரிக்கை நிறைவேற்றப்படும். சம்பந்தப்பட்ட துறையினர் இதற்கான நிதி ஒதுக்கியுள்ளதாக தெரிவித்தார்.
வட்டாட்சியரின் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் மக்கள் போராட்டத்தை கைவிட்டனர்.
அப்போது, துணை வட்டாட்சியர் தெய்வேந்திரன், வருவாய்ஆய்வாளர் உமா மகேஸ்வரி, கிராம நிர்வாகஅலுவலர் ஜோதிராஜ், ஊராட்சி மன்றச் செயலாளர் பாண்டி ஆகியோர் உடனிருந்தனர். விக்கிரமங்கலம் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடு செய்து இருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu