உசிலம்பட்டி அருகே போலீஸ் சகோதரர்களை கண்டித்து கிராம மக்கள் போராட்டம்

உசிலம்பட்டி அருகே போலீஸ் சகோதரர்களை கண்டித்து கிராம மக்கள் போராட்டம்
X

போலீஸ் சகோதரர்களை கண்டித்து போராட்டம் நடத்திய கிராம மக்கள்.

உசிலம்பட்டி அருகே போலீஸ் சகோதரர்களை கண்டித்து கிராம மக்கள் பாதையில் முள் தடுப்பு அமைத்து போராட்டம் நடத்தினர்.

உசிலம்பட்டி அருகே அரசு புறம்போக்கு நிலத்தை போலீஸ் சகோதாரர்கள் ஆக்கிரமித்ததால் கிராம மக்கள் முள் தடுப்புகள் அமைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உ.மாரிபட்டி கிராமத்தைச் சேர்ந்த தேவராஜ், குபேந்திரன் என்ற சகோதரர்கள் காவல்துறையில் பணியாற்றி வருகின்றனர்.

இவர்கள் காவலர்கள் என்ற அதிகாரத்தை பயன்படுத்தி கிராமத்தில் உள்ள அரசு புறம்போக்கு இடங்களை ஆக்கிரமிப்பு செய்து பாதைகள் அமைப்பதாக குற்றம் சாட்டிய கிராம மக்கள் கிராமத்தில் அரசு கட்டிடங்கள் கட்ட தேர்வு செய்துள்ள இடங்களை அதிகாரத்தை வைத்து ஆக்கிரமிப்பு செய்து வருவதாக கூறி பாதைகளில் முள் தடுப்பு அமைத்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த தகவலறிந்து விரைந்து வந்த உசிலம்பட்டி டி.எஸ்.பி. செந்தில்குமார் தலைமையிலான உத்தப்பநாயக்கணூர் காவல் துறையினர் மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கைகள் எடுப்பதோடு, அரசு கட்டிடங்கள் கட்டி தர நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

Tags

Next Story
சாப்பிட கசப்பா தான் இருக்கும்..ஆனா  இதுல  A to Z எல்லாமே இருக்கு...! இன்றே சாப்பிடுவோமா..? | Pagarkai benefits in tamil