உசிலம்பட்டி அருகே கிராம மக்கள் தேர்தலை புறக்கணித்து போராட்டம்
உசிலம்பட்டி அருகே கிராம மக்கள் தேர்தலை புறக்கணித்து போராட்டம் நடத்தினர்.
சுதந்திரம் பெற்ற காலத்திலிருந்து பேருந்து வசதி செய்யப்படாததால் கிராம மக்கள் தேர்தலை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்:
மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே வாலாந்தூர் ஊராட்சிக்கு உட்பட்டது சக்கிலியங்குளம் கிராமம்.இக் கிராமத்தில், சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
இக்கிராமத்தில், சாலை வசதி செய்யப்பட்டுள்ள நிலையில், இதுவரை பேருந்து வசதி செய்யப்படவில்லை.மேலும், மதுரை போடி அகல ரயில் பாதை செல்வதாலும், ரயில்வே சுரங்கப்பாதை அமைக்கப்படாத்தாலும், முற்றிலும் சாலை முற்றிலும் துண்டிக்கப்பட்டு கிராமத்துக்குள் ஆட்டோ, சரக்கு வாகனம் உள்ளிட்ட வாகனங்கள் வர இயலாத சூழ்நிலையில் உள்ளது. இதனால் ,கிராம மக்கள் பேருந்தில் செல்ல வேண்டும் என்றால் சுமார் ஐந்து கிலோ மீட்டர் தூரம் நடந்து அருகிலுள்ள வாலாந்தூர் கிராமத்திற்குள் செல்ல வேண்டும். மேலும், பலே கல்லூரிக்கு செல்லும் மாணவ மாணவிகள் மிகவும் சிரமப்பட்டு வந்தனர்.
இதனால், தங்கள் கிராமத்திற்கு பேருந்து வசதி வேண்டுமென கிராம மக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். இது தொடர்பாக, அரசுக்கு பலமுறை மனு கொடுத்தும் எந்தவித பதிலும் இல்லை. தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்க பாராளுமன்றத் தேர்தல் புறக்கணிக்க போவதாக தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக, அரசு அதிகாரிகள் கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியும் எவ்வித பலனும் இல்லை .
மேலும், இன்று தேர்தல் நடைபெற்று வரும் சூழ்நிலையில், தேர்தலை புறக்கணித்து கிராம மந்தையில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், இந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கிராமத்தில் போலீசார் பாதுகாப்பிற்கு போடப்பட்டுள்ளனர்.கிராமத்தில் 560 ஓட்டுகள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu