உள்ளாட்சி தினம்: சோழவந்தான் பகுதியில் கிராம சபைக் கூட்டங்கள்

உள்ளாட்சி தினம்: சோழவந்தான்  பகுதியில் கிராம சபைக் கூட்டங்கள்
X

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே முதலைக்குளம் ஊராட்சியில் நடந்த கிராம சபைக் கூட்டம்.

உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு சோழவந்தான் பகுதிகளில் கிராம சபை கூட்டங்கள் நடத்தப்பட்டன.

மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே செல்லம்பட்டி ஒன்றியம் முதலைக்குளம் ஊராட்சியில் உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராம சபை கூட்டம் நேற்று நடந்தது

இக்கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் பூங்கொடி பாண்டி தலைமை வகித்தார். துணைத் தலைவர் ரேவதிபெரியகருப்பன் பற்றாளர் ரோஸ்லின் ஆகியோர் முன்னிலை வகித்தனர் ஊராட்சி செயலாளர் பாண்டி திட்டங்கள் குறித்து அறிக்கை வாசித்தார்.

இதே போல் விக்கிரமங்கலம் ஊராட்சியில் செக்கான்கோவில்பட்டி கிராமத்தில் நடந்த கிராம சபை கூட்டத்திற்கு தலைவர் கலியுகநாதன் தலைமை வகித்தார். துணைதலைவர் செல்விசெல்வம், பற்றாளர் செல்வமணி ஆகியோர் முன்னிலை வைத்தனர் ஊராட்சி செயலாளர் பால்பாண்டி அறிக்கை வாசித்தார்.

வாடிப்பட்டி ஒன்றியம் காடுபட்டி ஊராட்சியில் நடந்த கிராம சபை கூட்டத்திற்கு தலைவர் ஆனந்தன் தலைமை வகித்தார் ஊராட்சி செயலாளர் ஒய்யனன் அறிக்கை வாசித்தார் மன்னாடிமங்கலம் ஊராட்சியில் தலைவர் பவுன் முருகன் தலைமை வகித்தார். துணைத்தலைவர் பாக்கியம் செல்வம் முன்னிலை வகித்தார். ஊராட்சி செயலாளர் திருச்செந்தில் அறிக்கை வாசித்தார்.

தென்கரை ஊராட்சியில் தலைவர் மஞ்சுளா ஐயப்பன் தலைமை வகித்தார். துணைத்தலைவர் கிருஷ்ணன் முன்னிலை வகித்தார். ஊராட்சி செயலாளர் முனியராஜ் அறிக்கை வாசித்தார் மேலக்கால் ஊராட்சியில் தலைவர் முருகேஸ்வரி வீரபத்திரன் தலைமை வாசித்தார். துணைத் தலைவர் சித்தாண்டி முன்னிலை வகித்தார்.

ஊராட்சி செயலாளர் விக்னேஷ் அறிக்கை வாசித்தார் திருவாலவாயநல்லூர் ஊராட்சியில் தலைவர் சகுபர் சாதிக் தலைமை வகித்தார். துணைத் தலைவர் மாலிக் முன்னிலை வகித்தார் செயலாளர் வேலன் அறிக்கை வாசித்தார். இதே போல் முள்ளிபள்ளம் ஊராட்சி தலைவர் பழனிவேல் தலைமை வகித்தார். துணைத்தலைவர் கேபிள் ராஜா தலைமை வகித்தார். ஊராட்சி செயலாளர் மனோபாரதி அறிக்கை வாசித்தார் இதில் வார்டு உறுப்பினர்கள் உட்பட பொதுமக்கள் கலந்து கொண்டனர்

Tags

Next Story
கிரீன் டீ குடிக்கிற பழக்கம் இருக்கா?..அப்போ அதுல கொஞ்சம் எலுமிச்சை சாறும் சேத்துக்கோங்க..உடம்புக்கு பல நன்மைகளை தருதாம்!!