குருவித்துறை சித்திர ரத வல்லபப் பெருமாள் ஆலயத்தில் வைகுண்ட ஏகாதசி திருவிழா

குருவித்துறை சித்திர ரத வல்லப பெருமாள் ஆலயத்தில் உள்ள குரு பகவான்.
,Vallapa Perumal Temple Vaikunda Ekadasi Pooja
குருவித்துறை சித்திர ரத வல்லப பெருமாள் கோவில் வைகுண்ட ஏகாதசி திருவிழா ஆறாண்டுகளுக்குப் பிறகு நாளை நடைபெறுகிறது. இதையொட்டி, குருவித்துறை கிராமத்திற்கு சித்திர ரதவல்லப பெருமாள் குதிரை வாகனத்தில் சென்று இரவு தங்கி இருந்து மறுநாள் கோவிலுக்கு வந்தடையும், இவ்விழாவை முன்னிட்டு 9 நாட்கள் கலை நிகழ்ச்சி நடைபெறுகிறது.
மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே, கோவில் குருவித்துறை கிராமத்தில் வைகைக் கரையில் அமைந்து வேண்டுவோருக்கு வேண்டும் வரம் கொடுக்கும் சித்திர ரதவல்லப பெருமாள் கோவில் மிகவும் சிறப்பு பெற்ற கோவில்களில் ஒன்றாகும். இக்கோவிலில் கடந்த 2017 ஆம் ஆண்டு உற்சவர் சிலைகள் திருடு போனது.
இது கண்டுபிடிக்கப்பட்டு, கடந்த சில மாதங்களுக்கு முன்பாக பிரதிஷ்டை செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. இதனால் ஆறு வருடமாக வைகுண்ட ஏகாதசி திருவிழா நடைபெறவில்லை.
இக்கோவிலில், வருடந் தோறும்வைகுண்ட ஏகாதசி திருவிழா மிக சிறப்பாக நடைபெறும். இதே போல் நாளை வைகுண்ட ஏகாதசி திருவிழாவை முன்னிட்டு சொர்க்கவாசல் திறக்கப்பட்டு, சுவாமி கோவிலில் இருந்து கருடாழ்வார் வாகனத்தில் அலங்காரமாகி கோவிலை சுற்றி வலம்வந்து குருவித்துறை கிராமத்தில் உள்ள கன்னிப்பமுதலியார் மண்டகப்படியில் சென்றடையும். இதைத் தொடர்ந்து, மண்டகப்படியில் இருந்து பெருமாள் கிராமத்தில் வலம் வந்து மீண்டும் மண்டகப்படிக்கு சுவாமி வந்து சேரும். அங்கு பெருமாளுக்கு பால்,தயிர் உட்பட 12 திருமஞ்சனம் திரவியங்கள் அபிஷேகம் நடைபெறும். குதிரை வாகனத்தில் சுவாமி அலங்காரமாகி சிறப்பு அர்ச்சனையும் செய்யப்படும். கிராம மக்கள் பூஜைகள் நடத்துகின்றனர். இதைத் தொடர்ந்து, மறுநாள் காலை சுவாமி கோவிலுக்கு சென்றடையும். மூன்று நாட்கள் தினசரி அன்னதானமும், 9 நாட்களும் வெவ்வேறு அமைப்புகள் சார்பாக தினசரி கலை நிகழ்ச்சி நடைபெறுகிறது. திருக்கோவில் நிர்வாகம், திருவிழாகமிட்டி நிர்வாகிகள் மற்றும் கிராம பொதுமக்கள் விழா ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu