உசிலம்பட்டி தேவி கருமாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழா

உசிலம்பட்டி தேவி கருமாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழா
X

உசிலம்பட்டி தேவி கருமாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவில் கோபுர கலசங்கள் மீது புனித நீர் ஊற்றப்பட்டது.

உசிலம்பட்டி தேவி கருமாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழா மிக சிறப்பாக நடைபெற்றது.

உசிலம்பட்டியில் உள்ள அருள்மிகு ஸ்ரீதேவிகருமாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி கவுன்டண்பட்டி ரோட்டில் உள்ளது. அருள்மிகுஸ்ரீ தேவி கரு மாரியம்மன் கோவில். இக்கோவில் புரனமைக் கப்பட்டு, கடந்த 12வருடங்களுக்கு பிறகு கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இந்த விழாவையொட்டி, முன்னதாக கணபதி ஹோமம், கோமாதா பூஜை, முதல் கால யாகசாலை பூஜைகள், வாஸ்து சாந்தி, மூல மந்திர ஜெயம் மற்றும் இரண்டாம் காலயாக சாலை பூஜைகள், மூன்றாம் கால யாக சாலை பூஜைகள், நான்காம் கால யாக சாலை பூஜைகள் நடைபெற்றதை தொடர்ந்து, கடம்புறப்பாடு நடைபெற்றது. பின்னர் மங்கள இசை முழங்க சிவாச் சாரியார் ராம்குமார் தலைமையிலான அர்ச்சகர்கள், தேவி

கருமாரியம்மன் கோவில் கோபுர கலசத்திற்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தினர். அதனைத் தொடர்ந்து, கோவிலில் உள்ள சிவலிங்கம், விநாயகர்,நந்தி, முருகன் உள்ளிட்ட சிலைகளுக்கும் புனித நீர் தெளிக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அதனைத்தொடர்ந்து, தேவி கருமாரியம்மனுக்கு, பாலாபிஷேகம் நடைபெற்றது.

இதற்கான ஏற்பாடுகளை, கோவில் கமிட்டி குழுவினர் செய்தனர். மேலும், கோவில் கமிட்டி குழு சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது

Tags

Next Story
ஈரோடு: வயதான தம்பதி மீது மோட்டார் சைக்கிளில் மோதிய கூலி தொழிலாளி பலி